எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, January 22, 2018

எது இலக்கியம்?




எது இலக்கியம்?
புதியவன்

இலக்கியம் என்பது
சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்கான
ஒரு மொழியின் படைப்பாகும்

இலக்கியம் மூன்று நிலைப்படும்.
1.வரலாற்று நிலைப்படும்
2.செயல் நிலைப்படும்
3.கொள்கை நிலைப்படும்
மூன்று நிலைப்படுதலும் இரண்டு வகைப்படும்.

1.வாய்மொழி இலக்கியம்
2.எழுத்திலக்கியம்
இவை இரண்டும் வரலாற்று நிலைப்பாடாகும்.

1.கலை இலக்கியம்
2.அறிவியல் இலக்கியம்
இவை இரண்டும் செயல் நிலைப்பாடாகும்

1.தன்னிச்சை இலக்கியம்
2.சமூகளாவியஇலக்கியம்
இவை இரண்டும் கொள்கை நிலைப்பாடாகும்

வாய்மொழி இலக்கியம்
        எழுத்து உருப்பெறாத காலத்திலிருந்து சகமனிதர்கள் தங்களது கற்பனைகளையும் கருத்துக்களையும் வாய்மொழி வாயிலாக பரிமாறிக்கொண்டிருக்கின்ற இலக்கிய வடிவமே வாய்மொழி இலக்கியமாகும். பழமொழி, கதைப்பாடல், உழைப்புப் பாடல், விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, கதை கூறல் போன்றன வாய்மொழி இலக்கியங்களாகும்.
   
எழுத்திலக்கியம்
        எழுத்து உருப்பெற்ற காலத்திலிருந்து சகமனிதர்கள் தங்களது கற்பனைகளையும் கருத்துக்களையும் எழுத்துமொழி வாயிலாக பரிமாறிக்கொண்டிருக்கின்ற இலக்கிய வடிவமே எழுத்திலக்கியம் ஆகும். மரபுக்கவிதைகள், நவீனக் கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், இலக்கண செய்யுட்கள், மருத்துவச் செய்யுட்கள் போன்றன எழுத்திலக்கியங்களாகும்.

கலை இலக்கியம்
        கலை இலக்கியம் என்பது சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்காக அவர்களது உணர்வுநிலையில் உந்துதல் ஏற்படுத்துகின்ற ஒரு மொழியின் வாழ்வியல் படைப்பாகும். கலை என்பது மனிதர்களது புலனறிவு நிலையில் அழுத்தத்துடன் செயலாற்றுவது குறைவு. மாறாக மனித ஆழ்மனக்குழியோடு உறவாற்றுகின்ற உணர்வு நிலையில்தான் அழுத்தமாகச் செயலாற்றுகின்ற திறனைப் பெற்றுள்ளது.

அறிவியல் இலக்கியம்
        அறிவியல் இலக்கியம் என்பது சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்காக அவர்களது புலனறிவு நிலையில் உண்மைகளை உணர்த்துகின்ற ஒரு துறை சார்ந்த மொழியின் விளக்கங்களாகும். அறிவியல் என்பது மனிதர்களது ஆழ்மனக்குழியின் உணர்வுநிலையில் அழுத்தத்துடன் செயலாற்றுவது குறைவு. மாறாக மனிதர்களது புலனறிவு நிலையில்தான் துல்லியமாகச் செயலாற்றுகின்ற திறனைப் பெற்றுள்ளது.



தன்னிச்சை இலக்கியம்
        சமூகளாவிய இலக்கற்ற இலக்கியப் படைப்பாளரின் சமூகத்தேவை சாராத தன்னிச்சை கொள்கையை வெளிப்படுத்துவதற்கான வடிவமாக படைக்கப்பெறுகின்ற இலக்கியமே தன்னிச்சை இலக்கியம் ஆகும்.

சமூகளாவிய இலக்கியம்
                சமூகளாவிய இலக்குடைய இலக்கியப் படைப்பாளரின் சமூகத்தேவை சார்ந்த கொள்கையை வெளிப்படுத்துவதற்கான வடிவமாக படைக்கப்பெறுகின்ற இலக்கியமே சமூகளாவிய இலக்கியம் ஆகும்.







                             


No comments:

அதிகம் படித்தவை