எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

காதலா்தினகீதம்




காதலர்தினகீதம்
புதியவன்

சுமையான சித்தாள் வேலைக்குள்
செதுங்கியிருக்கும் பெண்பிள்ளை...
நுண்கலை வேலையைப் பதுக்கியிருக்கும்
வஞ்சகமான ஆண்பிள்ளை...
தட்டுக்கும் கரண்டிக்கும் காதல்
இவளை தென்றல்போல என்பான்
இவனை உலகஉத்தமன் என்பாள்

சீறி நிற்கும் முள்ளுக் காட்டை
வெட்டிச் சுமக்கும் பெண்பிள்ளை...
மேடுபள்ளத்தில் மேலுகுலுங்கி
மோட்டார் ஓட்டும் ஆண்பிள்ளை...
முள்ளுக்கும் மோட்டாருக்கும் காதல்
இவளைப் பூவே என்பான்
இவனை வீரனே என்பாள்


குடும்ப வேலையும் கணக்கா செய்யும்
கல்லூரி பயிலும் பெண்பிள்ளை...
இவளை மட்டுமே கணக்கு செய்யும்
சினிமா பைத்தியம் ஆண்பிள்ளை...
சமையலுக்கும் சினிமாவுக்கும் காதல்
இவளை சர்க்கரைப்போல என்பான்
இவனை மாசில்லாமன்னன் என்பாள்

வலி தாங்கும் வீரம்
விட்டுக்கொடுக்கும் தியாகம்
தேங்கிக் கிடக்கும் சோகம்
இதுதான் பெண்ணின் மொத்த உருவம்
இதையும் காதல் இப்படிப் பாடும்
பூவே..மானே..தேனே..ஜாமே..கிரீமே...

சகதி மனசு
தப்ப ஒத்துக்காத கோழைத்தனம்
குற்றம் நூறானாலும் ஆம்பளங்கிற அகங்காரம்
இதுதான் ஆணுக்கு பெரிய உருவம்
இதையும் காதல் இப்படிச் சொல்லும்
உலகஉத்தமனே..மகாவீரனே..மாசில்லாமன்னனே..
சீறும்சிங்கமே..பாயும்புலியே..
கட்டுக்கடங்காதகாளையே...

காதல் மேடையில்
பெண்களுக்கு மென்கலவை நீராட்டு
ஆண்களுக்குக் கண்டபடி பாராட்டு

காதல் ஒரு பைத்தியந்தான்
அதான் காதலர்கள்
பொருந்தாவற்றையும் பொருத்திப் பாடுகிறார்கள்
கேட்டால் கவிதை என்கிறார்கள்

எந்த இனத்துக்கும்
இல்லாத காதல்
மனித இனத்தில் மட்டும்
?.. எப்படி ?..

நமக்கு காதலின் வரலாறும் தெரியாது
வரையறையும்  புரியாது
இதில் காதலர்தினம்வேறு!


பிப்ரவரி பதினாலு
காதலர்தின திருநாளு

சீழ்வடிந்து குமட்டுகிற
சாதிவெறி சனியனை

வீச்சமெடுத்து நாறுகிற
மதவெறி மடையனை

பெண்களைப் பொருளாக்கி
பண்பாட்டைப் பாழாக்கி
காதலைக் காசாக்கும்
வியாபாரப் பேய்களை

ஆணுக்கும் பெண்ணுக்கும்
தனித்தனி நியாயமென
சரிசமத்தை மதிக்காத
புளுத்துப்போன பூமியை

மனிதகுலம் வெற்றிபெற
சண்டை போட வேண்டும்!

இவைகளோடு சண்டைபோட
காதல் ஒரு களம்
தலையணையோடு சண்டைபோடும்
சிறுவர்களைப் போலாவது
போராட வேண்டும் காதலர்கள்!

நீயும் நானும் புலம்புவதால்
என்னாகப் போகுது
சினிமாப்பாணிக் காதலர்களுக்கு
புரியவாப் போகுது

வா பெண்ணே...
நாம் காதலில் குழைவோம்!

ஆண்மயிலே..பூவே..தேனே...
எனஎன்னைநீயும்
பெண்சிங்கமே..வலியதேகமே..முரடியே...
என உன்னை நானும்
பாராட்டி காதல் செய்வோம்...
காதலர்தினத்துக்கு
புதுசாக இருக்கட்டும்!



வெளிவந்த விபரம்

புதியகோடாங்கி, பிப்ரவரி 2014, (பக் 22)

சாளரம் மாணவர் இதழ் விபரம் குறிப்பில்லை

நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் என்ற நூலில்

No comments:

அதிகம் படித்தவை