எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

1+1=(2)ரிமை - ஓட்டுாிமை





1+1=(2)ரிமை - ஓட்டுரிமை

புதியவன்

பறவையைப் பார்த்து
அதிகாரமாய் சொன்னது
அடைமழை

சிறகுடைய பறவையே
பறப்பது நம் உரிமை
பறக்காமலிருக்காதே
பறபறஎன்றது

அடைமழை அலற
பதிலுரைத்தது பறவை

அடேய் மழையே!
சிறகுகொண்டு பறப்பதா
காலைப் பரப்பி நடப்பதா
முடிவெடுப்பது நாங்கள்டா!

உரிமை என்றால் இரண்டுந்தான்
பறப்பதும் + பறக்காதிருப்பதும்

இந்தப் பாராளுமன்ற வவ்வாள்
பல்லை மறைத்து
பறவை போல் நடிக்கும்
பிறகு பல்லைக் காட்டி
மிருகம் போல் நடக்கும்

வவ்வாள்களின் அகராதியில்
நிற்றல் என்பதற்கு
தலைகீழாய் தொங்குவதே அர்த்தம்

பாராளுமன்ற வவ்வாள்களை
நேர்படுத்தல் என்பது
பிப்ரவரி முப்பத்தொன்றிலும் நிகழாது

மான்களின் தேசத்தில்
மலைப்பாம்பின் செல்வாக்கில்
ஓநாய் தலைமையில் ஒரு கூட்டணி
நரியின் தலைமையில் ஒரு கூட்டணி
தண்ணீர் முதலைகள் தனியணி

மான்கள் தம் வாழ்வை
யாருக்கு பலியிடும்?

ச்சீசீ…
இதுக்கொரு தேர்தலா!




வெளிவந்த விபரம்


வெளிவந்த விபரம்

கவிஞர் புதியவன் வார்த்தவை

அடையாள இலக்கம்: 548
காக்கை சிறகினிலே, ஜுன் 2012 (பக் 26)
காக்கை சிறகினிலே, ஆகஸ்டு 2012 (பக் 43)
புதுப்புனல், ஜுலை 2011
சாளரம் மாணவர் இதழ் விபரம் குறிப்பில்லை
நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் என்ற நூலில்

No comments:

அதிகம் படித்தவை