எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

தட்டுங்கள் திருத்தப்படும்




தட்டுங்கள் திருத்தப்படும்
புதியவன்
நெருப்புமழை பொழிகிறது
எல்லாத் துளிகளிலும்
கருகிப்போன வாழ்க்கையின்
முனங்கள் சத்தம் கேட்கிறது

எருமை மாட்டுக்கு
மழை பெய்தால்
சொரணை எப்படி தெரியும்?
நாம் எருமைகளாகவே வளர்ந்துவிட்டோம்!

கிரிக்கெட்டும் சினிமாவும்
கண்களை மேய்வதால்
நம்மை சுற்றியுள்ள கங்குகளைப்
பூக்கள் என்கிறது நரிகள்
நாமும் பூமிதிக்கிறோம்!


நமதுசமூகம்அரசுகுடும்பம்
நம்மை எருமைகளாகவே வளர்த்துவிட்டன!

கடிவாளம் கட்டிய குதிரைகளாக
சொரணைக்கெட்ட எருமைகளாக
பிரச்சனைகளே தெரியாமல்
அடங்கிக் கிடக்கிறோமே
இது யாருக்காக?

நமக்கும் சொரணை வருமென்றால்!
நெருப்புமழை பொழிகிறது

குடைபிடிப்பது எப்பொழுது?...

No comments:

அதிகம் படித்தவை