எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

நாங்கள் பேசுவது கேட்கிறதா?




நாங்கள் பேசுவது கேட்கிறதா?

புதியவன்



விசயங்கள் பூக்களாக இருந்தால்

பட்டாம்பூச்சிகளாக நாம்

சிறகடித்துப் பேசுவோம்...

பட்டாம்பூச்சிகளாக அவர்கள் பேசினால்

நாம் பூக்களாக கேட்டிருப்போம்



கடல் அளவில் விசயமென்றால்

வீசப்படும் வலையுள் மீன்களாக பேசுவோம்...

மீன்களாக அவர்கள் பேசினால்

நாம் ஆழ்கடலாக கேட்டிருப்போம்



விசயங்கள் பெருங்கல்லாக கடினமாக இருந்தால்

சிலை செதுக்கும் உளிகளாக பேசுவோம்...

உளிகளாக அவர்கள் பேசினால்

வடிவெடுக்கும் பாறைகளாக கேட்டிருப்போம்



ஊதாநெருப்பாக விசயங்கள் இருந்தால்

சிவந்தகங்காக வெடித்துப் பேசுவோம்...

கங்குகளாக அவர்கள் பேசினால்

காத்திருக்கும் எரிமலையாக

எழுச்சியுறக் கேட்டிருப்போம்



நம்மோடு அவர்களும்

அவர்களோடு நாமும்

பேசி முடிவெடுக்க

ஆயிரமாயிரம் இருக்கின்றன

கழுத்தை இறுக்கும் பிரச்சனைகள்



இந்த சமூகம் மாறிவிட வேண்டும்

இது மக்களின் விருப்பம்...

இந்த சமூகத்தை மாற்றிவிட வேண்டும்

இது சமூகவிஞ்ஞானிகளின்முழக்கம்!



எடுக்கப்படும் முடிவுகள்

செயல்களாக முடிச்சவிழ்கின்ற

ஒவ்வொரு பொழுதிலும்...

நாம் சமூகமாற்றத்தை

கண்டெடுக்கமுடியும்



சிமெண்ட்டும் மண்ணும்

நீரில் குழைந்து இறுகுதல்போல்

மக்களாக போராளிகளும்

போராளிகளாக மக்களும்

சமூகவிஞ்ஞான உணர்வில்

கலந்து இறுகிவிட்டால்...

பூபோன்ற அடக்குமுறைக்கும்

புயல்போன்ற ஒடுக்குமுறைக்கும்

கண்முன் அரங்கேறும் அநீதிகளுக்கும்

கண்களில் நடனமிடும் துயரங்களுக்கும்

சமாதிகட்டும் சரித்திரத்தை

உறுதியாகப் படைக்கலாம்! –
வெளிவந்த விபரம்
http://vaarppu.com/view/2273/
கவிஞர் புதியவன் வார்த்தவை

அடையாள இலக்கம்: 548

No comments:

அதிகம் படித்தவை