எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

மாப்புள மச்சான்களா நாத்துநடனும் வாங்கடா!




மாப்புள மச்சான்களா நாத்துநடனும் வாங்கடா!
புதியவன்
கலப்பை கருப்பையா
சுத்தியல் சுப்பையா
திருப்புலி திணேசு
சம்மட்டி சதீசு
செங்கல்கட்டு இருளாயி
நாத்துநட்டு பாப்பாத்தி
கறிவெட்டு ராமரு
மீன்வெட்டு காதரு
படகோட்டி ஜோசப்பு
காரோட்டி யூசுப்பு...

நம் விரல்கள்
செயலற்ற தெய்வம்போல்
சிலையானால்
இவ்வுலகம் அடிவயிற்றிலிருந்து
தேம்பி அழும்!

உலகைச் செதுக்குகிற
கரங்களின் ஆயுதங்களுள்
பேனாவிற்கும் பங்குண்டு

நம் கரங்களில்
பாறைகள் உடைபடும்
பட்டாம்பூச்சி விளையாடும்

நாம் பேனா பிடிப்பது
பட்டாம்பூச்சியைவிட அழகானது

உழைப்பை உறிஞ்சும்
நிர்வாக கொசுக்களின்
வரவு செலவு கணக்கெழுத மட்டுமல்ல
வாழ்க்கைக்கு முட்டுக்கட்டைகள் போடும்
குள்ளநரிகளின் கணக்கை முடிக்கவும்
நம் விரல்களில் பேனாக்கள் விளையாட வேண்டும்!

இது கட்டளையல்ல
வெயில் காலத்தில் வியர்வை

வியாபாரக் கல்விமுறை
மக்களின் ஆணிவேரை
வெட்டிக் கொண்டிருக்கையில்
நம் விரல்களுள் பேனாக்கள் விதைந்தால்
மண்ணிற்கேற்ற கல்வியை
நம் குட்டிகளாவது
அறுவடைசெய்யும்!

No comments:

அதிகம் படித்தவை