எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, May 31, 2017

இயல் – 3 சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் 2

3.14.5.பிற நம்பிக்கைகள் – மலையாளிகள் குடுகுடுப்பைக்காரன் இரவில் குறிசொன்னால் பலிக்கும் என்று நம்புகிறார்கள்அவன் நிகழ்வதாகக் குறிப்பிடுகின்ற கெட்டச் சூழல்களை அவனது பரிகார சடங்குகள் மூலமாக சரிசெய்ய முடியும் என்று நம்புகிறார்கள்திருமண காரியமாக செல்பவர்கள் வழியில் கட்டுக்கழுத்தி நிறைகுடத்துடன் செல்வதைப் பார்த்தால் நல்ல சகுணம் என்பதாக நம்புகிறார்கள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் மந்திரித்து விபூதி பூசினால் காய்ச்சல் போன்ற நோய்கள் குணமடையும் என்று நம்புகிறார்கள்குறும்பர்கள் செய்வினை செய்பவர்கள் என்பதாக படகர்கள் நம்புகிறார்கள்நோய் வந்தவர்களைக் குணமாக்குவதற்கான மூலிகை வேர்களைக் குறும்பர்கள் மந்திரித்துத் தருகிறார்கள்அதனை அவர்கள் சொல்லும் முறையில் கசாயம் வைத்துப் பயன்படுத்தினால் நோய் குணமடைவதாக நம்புகிறார்கள்அவர்கள் மாய மந்திரங்கள் செய்யும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது படகர்களின் நம்பிக்கை.

3.15.விழாக்கள்
3.15.1.குடும்ப விழாக்கள்
சோளகர் தொட்டியில் எந்தக் குடும்பத்தில் திருமணம்குழந்தை பிறத்தல் போன்ற காரியங்கள் நிகழ்ந்தாலும் ஊர் விழாவாகவே கொண்டாடப்படுகின்றதுதொட்டி மக்கள் ஒன்றுபட்டு வேலைகளைப் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றார்கள்விருந்து உண்டு மகிழ்ந்து இரவில் உக்கடத்தீ ஏற்றி இசைபாட்டுஆட்டம் என்பதாக விடியும்வரை தொடர்ந்து விழா முடிகின்றதுகொல்லிமலை மலையாளிகளது திருமணம் ஊர் விழாவாகத்தான் நிகழ்கின்றதுதிருமண காரியங்கள் முதல் நாள் மாலையிலிருந்து தொடங்குகின்றனவீட்டுக்கு ஒருவர் திருமண பணிகளைச் செய்வதற்கு வந்துவிடுகிறார்கள்வீட்டு வாசலில் பந்தல்கால் நடுவதற்கான குழிகளைப் பறித்து பந்தலமைக்கிறார்கள்வாழை மட்டை நார்களைப் பிரித்து கயிறாகத் திரிக்கிறார்கள்பந்தலுக்கான வரிச்சல் குச்சிகளைக் கட்டுகிறார்கள்இரவு நெருங்கியதும் உற்றார் உறவினர் வருகிறார்கள்பறைமேளம்உறுமிசங்குகொம்பு ஆகியவற்றின் இசைகள் சங்கமிக்கின்றனஅரிச்சந்திரன் கதைஅபிமன்யு கதை ஆகிய கதைகள் சிருங்கார ருசியுடைய கூத்துக்களாக நிகழ்த்தப்படுகின்றனஇரவு விருந்திற்கான உணவு தயாராகிவிடுகின்றதுநான்கு குச்சிகளில் சதுரம் அமைத்து அதன் மீது வாழையிலை வைக்கப்படுகின்றதுசோறிட்டு புளிரசம் ஊற்றுகிறார்கள்சதுரப் பள்ளத்தில் ரசமும் சோறும் குழைந்து சாப்பிடுவதற்கு வசதியாக அமைந்திருக்கின்றனஒவ்வொரு பந்தியின் போதும் பெண்ணின் பெற்றோர்கள் சாப்பிடத் தயாராகியுள்ள விருந்தினர்களின் முன்பாக விழுந்து வணங்கி சாப்பிடுமாறு வேண்டுகிறார்கள்சாப்பாடு முடிந்து இரவு முழுவதும் கூத்து கண்டு மகிழ்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 202-210).
3.15.2.தெய்வ விழாக்கள்
3.15.2.1.மணிராசன் கோயில் திருவிழா – சோளகர் தொட்டியில் ஆண்டிற்கு ஒருமுறை மணிராசன்  கோயில் திருவிழா நிகழ்த்தப்படுகின்றதுகோயிலின் பூசாரியாகத் தொட்டியின் கோல்காரன் இருக்கின்றார்கோயிலின் கெப்பைக்குழியில் நிரம்பியிருக்கும் முன்னோர்களின் எலும்புகளுக்குச் சொந்தமான ஆவி மணிராசனுக்குக் கட்டுப்பட்டு கோல்காரனின் உடலிலோ இறந்தவருக்குச் சம்மந்தப்பட்டவரின் உடலிலோ வந்து அவரது குடும்பத்தாருக்கு நீதி சொல்ல வேண்டும்அப்படி நிகழாவிட்டால் இறந்தவன் நீதி வழியிலான வாழ்க்கை வாழவில்லை என்று கருதப்படுகிறார்கள்திருவிழாவின்போது கோழிஆடு பலியிடப்பட்டு அவற்றின் இரத்தத்தால் கோல்காரனின் முன்னோர்களது கோல் நனைக்கப்பட்டு எடுத்துச்செல்லப்படுகின்றது. (பாலமுருகன்,.2013: 21-22).
3.15.2.2.சாணி வெட்டு விழா – மலையாளிகள் மழை பெய்ய வேண்டி சாணிவெட்டு விழாவை நடத்துகிறார்கள்விழா நடைபெறும் நாளை ஊர் கூடி தர்மகர்த்தா தலைமையில் முடிவெடுக்கிறார்கள்.  வாலிபர்களும் யுவதிகளும் இணைந்து விழாவை நடத்துகிறார்கள்மண்பானையை எடுத்துக்கொண்டு வீடுவீடாகச் சென்று கூழ் கஞ்சியைச் சேகரிக்கிறார்கள்கோவில் முன்னால் ஒன்றுகூடி உப்பில்லாமல் அவற்றை உண்ணுகிறார்கள்உண்டு முடித்ததும் கூடை கூடையாக மாட்டுச் சாணத்தை சேகரிக்கிறார்கள்பிள்ளையார் மீது உருவம் தெரியாத அளவிற்கு சாணியைக் கொட்டி பூசுகிறார்கள்சாணி பூசப்பட்ட பிள்ளையாரைச் சுற்றிலும் பெண்கள் கும்மியடித்துப் பாடுகிறார்கள்கரியைப் பொடி செய்து வாலிபர்களும் யுவதிகளும் ஒருவருக்கொருவர் முகத்தில் பூசியும் சாணிப்பாலை ஊற்றிக் கொண்டும் மகிழ்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 101-108).
3.15.2.3.தெய்வ ஹப்பா – படகர்கள் தேவர் பண்டிகையை தெய்வ ஹப்பா என்று அழைக்கிறார்கள்அறுவடை நிகழ்விற்காகக் கொண்டாடப்படுகின்ற விழாவாகும்வைகாசி மாதத் திங்கட் கிழமையிலோ ஆனி மாதத் திங்கட் கிழமையிலோ இவ்விழா நடைபெறுகிறதுஅறுவடைக்குத் தயாராக இருக்கின்ற தினைக்கதிர்களை முதலில் அறுத்து இறைவருக்குப் படைக்கும் நோக்கமாக இவ்விழா கொண்டாடப்படுகின்றதுஇவ்விழா முடிந்தபிறகுதான் அறுவடையை முழுவதுமாகச் செய்யத் தொடங்குகிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 123).
3.15.2.4.காளியம்மனுக்கு விழா – தாணிக்கண்டி மக்கள் கோயில் வீர காளியம்மன் கோயில் முன்பு ஊர்ப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்கோயில் பூசாரி சாத்தன் பாலும் பழமும் தவிர எதுவும் உண்ணாமல் விரதமிருந்தான்அவனது கையில் காப்புக் கட்டியிருக்கிறான்பொது இடத்தில் அடுப்பு மூட்டிப் படையலுக்கான உணவைச் சமைக்கிறார்கள்பெண்கள் வட்டமாகக் கும்மியடித்துக் கொண்டு பாட்டுப் பாடி ஆடுகிறார்கள்படையல் உணவு தயாரானதும் அம்மனுக்கு உணவைப் படைக்கிறார்கள்அம்மனின் அழகையும் அருளாட்சி செய்கின்ற பண்பையும் சிறப்பித்துச் சாத்தன் பூசாரி பாடுகிறான்.  முதலில் முத்துடைத்தல் என்னும் சடங்கு நடைபெறுகிறதுபிறகு அமுதம் எடுத்தல் என்னும் சடங்கு நடைபெறுகிறதுசாத்தன் அருள் வந்தவனாய் பக்தர்களுக்குக் குறி சொல்கிறான்மஞ்சள் பூசி அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை வீடுவீடாக ஊர்வலம் எடுத்துச் செல்கிறார்கள்ஊர்மிதித்தல் எனும் சடங்கு நிறைவடைகின்றதுபக்தர்கள் கட்டிய காப்புமஞ்சள் கயிறுதுணி ஆகியவற்றைப் பூசாரி அவிழ்த்து முடித்ததும் விழா நிறைவுறுகின்றது. (ஆட்டனத்தி. 2010: 118-121).
3.15.3.பிற விழாக்கள்
3.15.3.1.சகலாத்தி பண்டிகை – விளை நிலங்களில் விளைச்சல்கள் தீய சக்திகளால் பாதிப்படையக்கூடாது என்பதற்காகக் சகலாத்தி என்றொரு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்இந்தப் பண்டிகையை ஐப்பசி கார்த்திகை மாதங்களில் கொண்டாடுகிறார்கள்வீடுகளை மெழுகிச் சுத்தம் செய்கிறார்கள்மாலை நேரம் வாசலில் அழகான கோலங்களை வரைகிறார்கள்வீடுகளில் கோதுமை மாவில் தோசைகள் சுடுகிறார்கள்தோசைகளை அடுக்கி அவற்றின் நடுவே சோறிட்டு வெண்ணை வைத்து ஆமணக்கு நெய்யில் முக்கிய மூன்று திரிகளை அதில் பொறுத்தி எரியும்படி செய்கிறார்கள்குழந்தைகளை உட்காரச் செய்து சுற்றி திருஷ்டி கழிக்கிறார்கள்அந்தத் தோசைகளை விளைநிலங்களுக்கு எடுத்துச்சென்று வீசிவிட்டு வருகிறார்கள்வீடு திரும்பியதும் இறைவனை வழிபட்டு நிறைவு செய்கிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 242).
3.16.கலை
3.16.1.உக்கடத்தீயைச் சுற்றி ஆடுதல் - இரவு நேரத்தில் தொட்டிக்குள் நுழைந்த யானைகளை வனத்திற்குள் விரட்டுகின்ற முயற்சியில் தூக்கம் கலைந்தவர்கள்  மீண்டும் தூங்காமல் கலையில் ஈடுபட்டு மகிழ்கிறார்கள்கோல்காரன் பீனச்சியை இசைக்கிறான்ஒரு பெண் பாடல் பாடுகிறாள்கொத்தல்லி தப்பை மேளத்தை கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு இசைக்கு ஏற்றபடி தாளமிடுகிறான்சோளகர்கள் உக்கடத்தீயைச் சுற்றிலும் ஆணும் பெண்ணுமாக இணைந்து ஆடுகிறார்கள்.
3.16.2.விளையாட்டு – சோளகர் சிறுமிகள் ஊஞ்சல் கட்டி விளையாடுகிறார்கள்அரசமரத்தில் ஊஞ்சல் கயிறு கட்டியிருக்கிறார்கள்கயிற்றில் அமர்ந்து தொங்கியபடி விளையாடி மகிழ்கிறார்கள்கொல்லிமலை மலையாளிகளது குழந்தைகள் மண்ணைக் குவித்து சிற்றில் கட்டி குடும்ப நிகழ்வுகளை நடித்து விளையாடுகிறார்கள்மரகத மலை ஹட்டியிலுள்ள சிறுவர்கள் ஓடிபிடித்து விளையாட்டு விளையாடுகிறார்கள்.
3.16.3.கூத்து – கொல்லி மலை மலையாளிகளின் வீடுகளில் திருமணம் நிகழ்ந்தாலும்இறப்பு நிகழ்ந்தாலும் கூத்துக்கலைஞர்களை அழைத்து இரவு முழுதும் கூத்து நிகழ்த்துகிறார்கள்அரிச்சந்திரன் கதைஅபிமன்யு கதை ஆகியனவற்றைக் கூத்துக் கலைஞர்கள் நிகழ்த்துகிறார்கள்.
3.16.4.இசை – சோளகர்கள் பீனச்சிதப்பை ஆகிய இசைக்கருவிகளை இசைக்கிறர்கள்படகர்களின் வாழ்க்கைச் சடங்கு அனைத்திலும் கோத்தர்களது இசை சேவை இணைந்திருக்கிறதுகுழல்தாரைமத்தளம்தப்பட்டைபறை போன்ற இசைக்கருவிகளை இசைக்கிறார்கள்தாணிக்கண்டி இருளர்கள் பொரைகொகால்பீக்கிஜால்ரா ஆகிய இசைக்கருவிகளை இசைக்கிறார்கள்.
3.16.5.கதை சொல்லுதல் – தனிக்குடிசையில் தங்கவைக்கப்படுகின்ற பூப்பெய்தும் பெண்களுக்குத் துணையாக முதிர்ந்த பாட்டி தங்குகிறாள்பாட்டியிடம் கதை கேட்டுக்கொண்டே தனிமையைப் போக்குகிறார்கள்கதை கேட்கும் பெண் தன்னை மறந்து தூங்கும்வரை பாட்டி கதை சொல்கிறாள்கதைப்பாடலைப் பாடி விளக்கக் கதைகளைச் சொல்கிறாள்.
3.16.6.பாடல் – படகர்கள் மாதலிங்கேசுவரர் வழிபாட்டின் போது மாதலிங்கேசுவரர் பற்றியப் பாடல்களையும் ஹத்தையம்மன் பற்றிய பாடல்களையும் பாடுகிறார்கள்.
3.16.6.1.வயல்ப் பாட்டு – மலையாளிகள் விவசாய வேலைகளில் ஈடுபடுகின்றபோது களைப்பின்றி உழைப்பதற்காக பாட்டுப்பாடுகிறார்கள்ஆண்களும் பெண்களும் இணைந்து பாடுகிறார்கள்சேறு கலக்கும்போதும் நாற்று நடுகின்றபோதும் இத்தகைய பாடல்களைப் பாடுகிறார்கள்ஒருவர் பாடலுக்கான வரியை மெட்டுடன் அமைத்துப் பாடுவார்மற்ற உழைப்பாளர்கள் அந்த வரியை உள்வாங்கிக்கொண்டு மீண்டும் அதே வரியை ஒன்றிணைந்து பாடுகிறார்கள்.
3.16.6.2.குலவிப் பாடுதல் – பெண்கள் குலவை சப்தமிட்டுப் பாடுவதைக் குலவி பாடுதல் என்கிறார்கள்கோல்காரன் தனது பொறுப்பையும் சித்திர வேலைபாடு மிக்க முன்னோரது கோலையும் மகனிடம் ஒப்படைக்கின்ற சடங்கின்போது பெண்கள் குலவி பாடுகிறார்கள். (பாலமுருகன்,.2013: 69)
3.16.6.3.கதைப் பாடல் – பொன்னி என்ற பெண்ணுக்கு இராமாத்தாள் சொல்லிய ஏலாதும்பன் கதைப்பாடல். “ஏலாதே ஏலாதே ஏலாதும்பனே / ஏலாமலெ முத்துக்கு / போறது ஆறுமாசம் / வருவது ஆறுமாசம் / ஏலாதே ஏலாதே ஏலாதும்பனே...” (ஆட்டனத்தி. 2010: 58) என்றொரு கதைப்பாடலைப் பாடுகிறார்பாடலில் விளக்கப்படும் கதை பின்வருமாருஏலாதும்பன் என்றொரு இருளன் இருக்கிறான்அவனுக்கு தாயும் மனைவியும் இருக்கிறார்கள்ஏலாமலை என்ற இடத்திலிருந்து முத்து எடுப்பதற்காக இருவரையும் பிரிந்து செல்கிறான்போக ஆறுமாதமும் திரும்பி வருவதற்கு ஆறுமாதமும் ஆகின்றதுஇதற்கிடையில் மனைவியைக் கொல்வதற்குத் தாயார் முயற்சி செய்கிறாள்மருமகள் வீட்டுக்குத் தூரமாகிய நேரத்தில் பாம்புக்கறியை சமைக்கிறாள்மான்கறி என்று பொய்சொல்லி பாம்புக்கறியை உண்ணச் செய்தாள்பாம்புக்கறியை உண்டுவிட்டு மருமகள் இறந்துவிடுகிறாள்முத்தெடுக்கச் சென்ற ஏலாதும்பன் பணியை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி வருகிறான்தாயிடம் மனைவியைப்பற்றி விசாரிக்கிறான்ஆற்றுக்குப் போயிருப்பதாகவும்கீரை எடுக்கப் போயிருப்பதாகவும் சொல்லி தாய் சமாளிக்கிறாள்கணவன் மனைவியைத் தேடிச் சென்று சடலத்தைக் கவனிக்கிறான்பிறகு உண்மையை அறிந்துகொள்கிறான்மனைவியைக் கொன்ற தாயை கோபத்தின் காரணமாக வெட்டிப் படுகொலை செய்கிறான்.
3.17.அறிவியல்
3.17.1.நேரம் மதிப்பிடுதல் – சோளகர்கள் நேரத்தை ஜாமம் என்று அழைக்கிறார்கள்இரவில் வானில் நட்சத்திரங்களின் இயங்கு முறையைக் கணக்கிட்டு முதல் ஜாமம் இரண்டாம் ஜாமம் என்பதாக நேரத்தை மதிப்பிடுகிறார்கள்.  கட்டக்குத்துக்கால் மீன் மேற்கே இறங்கியுள்ளதை கவனித்த ஜோகம்மாள் மூன்றாம் ஜாமம் என்று மதிப்பிடுகிறாள்.
3.17.2.பாம்பைக் கண்டறிதல் – வாசத்தை வைத்துக்கொண்டு பாம்பின் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்கிறார்கள்மண்ணை முகர்ந்து பார்த்தால் ஊறவைத்த உளுந்தப் பருப்பின் வாசமிருந்தால் கருநாகம் இருப்பதாக அறிந்துகொள்கிறார்கள்.
தமிழகப் பழங்குடிகளைப் பற்றிய புதினங்களில் அறிவியல் தத்துவப் பார்வை  பற்றிய செய்திகள் செறிவாக இடம்பெறவில்லை.
3.18.மருத்துவம்
3.18.1.பிரசவம் பார்த்தல் - சோளகர் பெண்கள் தங்களது முதல் குழந்தையைத் தாய் வீட்டில்தான் பிரசவிக்கிறார்கள்குடிசையின் நடுவிட்டத்தில் ஒரு கயிறை கட்டுகிறார்கள்பிரசவ வலியுடைய பெண்ணை அந்தக் கயிற்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு மண்டியிட்டு உட்கார வைக்கிறார்கள்குழந்தையை வெளியேற்ற அந்தப் பெண் சக்தியுள்ளவரை முயற்சி செய்கிறாள்சூடானத் தண்ணீரையும்ஆமணக்கு எண்ணெய்யையும்சீலைத் துணியையும் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்மருத்துவச்சி தனது கைகளில் ஆமணக்கு எண்ணெய்யை கையிலெடுத்துக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் நீவியபடி சில மந்திரங்களை முணுமுணுக்கிறாள்கர்ப்பிணி தனது வயிற்றிலிருந்து வெளிதள்ளுகின்ற குழந்தையை மருத்துவச்சி பக்குவமாகப் பெறுகிறாள். (பாலமுருகன்,.2013: 10-11).
            கொல்லிமலை மலையாளிப் பெண்களின் பிரசவம் மருத்துவச்சியின் உதவியுடன் நிகழ்கிறதுவீட்டு முகட்டில் ஒரு கயிறு கட்டப்படுகிறதுபிரசவவலிகண்ட பெண் அந்தக் கயிற்றை பிடித்துத் தொங்குகிறாள்அவளுக்குத் துணையாகப் பிரசவம் பார்க்கின்ற மருத்துவச்சியும் இரண்டு பெண்களும் இருக்கிறார்கள்மருத்துவச்சி விளக்கெண்ணையை வயிற்றில் தடவிவிடுகிறாள்கர்ப்பிணி குழந்தையை வயிற்றிலிருந்து வெளியேற்ற முக்கி முக்கி தொடர்ந்து முயற்சி செய்கிறாள்கணவனைத் தவிர வேறொருவனுடன் சேர்ந்து கருவாகியிருந்தால் குழந்தை வெளிவருவதில் சிரமம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்கர்ப்பிணிப் பெண் தன் வாயால் எந்த ஆணுடன் சேர்ந்து கருவுற்றாள் என்பதை கூறிய பின்பே குழந்தை வெளிவருவது எளிமையாகிறதுகர்ப்பினி குறிப்பிட்ட நபரை அழைத்துவந்து ஊர் தர்மகர்த்தா ஒரு சடங்கை செய்கிறார்பிறகு மருத்துவச்சியின் உதவியுடன் தனது குழந்தையை எளிதாகப் பெற்றுவிடுகிறாள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 84-93).
3.18.2.காய்ச்சல் – சோளகர் தொட்டியில் காய்ச்சல் கண்டவர்களுக்குக் கசாயம் எனும் மருந்தை தயார் செய்து அருந்தக் கொடுக்கிறார்கள். இது திரவத் தன்மையில் உருவாக்கப்படுகின்ற மருந்து உணவு ஆகும்வனத்திலிருந்து மருத்துவ குணமுடைய மூலிகைச் செடிகளையும் பட்டையையும் சேகரித்து வந்து தயார் செய்கிறார்கள்காய்ச்சல் என்ற நோயை சுரம் என்கிறார்கள்பொன்னி என்ற இருளப் பெண் விபூதி பூசி குணப்படுத்துகிறாள்பூசாரி மந்திரித்துக் குணப்படுத்துகிறான்.
3.18.3.சேற்றுப்புண் தடுப்பு மருந்து – ஊளைச் சேற்றில் உழைக்கின்ற மலையாளிகள் சேற்றுப்புண் வராமல் தடுக்க ஒரு வகை எண்ணெய்யைப் பயன்படுத்துகிறார்கள்விளக்கெண்ணையையும் அரிவாள் தழை என்னும் மூலிகையிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றையும் கலந்து தயாரிக்கிறார்கள்சேற்றில் இறங்குவதற்கு முன்பாக இந்த எண்ணெய்யைக் கால்களில் பூசிக்கொள்கிறார்கள்.
3.18.4.மாட்டிற்கு நோய் தீர்த்தல் – மாட்டிற்கு செல நோய் ஏற்பட்டுவிட்டால் உணவுதண்ணீர் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளாமல் சோர்ந்திருக்கும்அதன் அடிநாக்கு நீல நிறத்திலிருக்கும்அடிநாக்கிலுள்ள ஒரு குறிப்பிட்ட நரம்பை அறுத்து கெட்ட ரத்தத்தை வெளியேற்றுகிறார்கள்அல்லது சித்தஅரத்தை என்னும் ஒரு வகை மூலிகையைச் சேகரித்துவந்து மருந்தாகக் கொடுக்கிறார்கள்இந்த மூலிகையை மாட்டிற்கு ஏற்படுகின்ற செல நோய்க்கும் சப்பைகட்டு நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. (சின்னப்ப பாரதி,கு. 2008: 98). படகர்கள் தங்களது எருமைக்குக் கால் ஒடிந்து ரத்தம் வெளியேறி துன்புறுகின்றபோது நீரால் சுத்தம் செய்து பச்சிலைகளை மருந்தாகப் பயன்படுத்தி குணப்படுத்துகிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 25-26).
3.18.5.பாம்பின் விச முறிவு – கொல்லன்ஆகாசக் கருடன்ஆகாய புருடன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற கிழங்கினைப் பாம்பின் விசத்தை முறிக்கும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்அந்தக் கிழங்கை துண்டு துண்டாகச் சீவி நன்கு காய வைக்கிறார்கள்காய வைத்த கிழங்கை இடித்து மாவாக்குகிறார்கள்இந்த மாவினைப் பாம்பின் விசமுறிவிற்குரிய மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 87).
3.18.6.சர்க்கரை நோய் – சர்க்கரை நோய் வராமல் பாதுகாப்பதற்காக சர்க்கரை கொல்லி இலைகளை மருந்தாகக் கொடுக்கிறார்கள்.
3.18.7.மருத்துவம் பற்றிய பிற செய்திகள் - தாணிக்கண்டி இருளர்கள் குழந்தைக்கு பேச்சு நன்றாக வருவதற்காக மலைத்தேன் கொடுக்கிறார்கள்.
3.19.கல்விமுறை
3.19.1.உண்டு உறைவிட பள்ளி – சோளகர்கள் தங்களது குழந்தைகளை மாவள்ளம் ஊரில் அமைந்துள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்க அனுப்புகிறார்கள்ஜோகம்மாளின் மகள் ரதி இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படிக்கின்றாள்தாணிக்கண்டி இருளர்கள் தங்களது பிள்ளைகளை முட்டத்துவயல் கிராமத்திலுள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்கச் செய்கிறார்கள்.
3.19.2.மிஷன் பள்ளிக்கூடம் – கீழ்மலை என்ற பகுதியில் மிஷன் பள்ளிக்கூடம் இயங்குகின்றதுகிறித்தவப் பாதிரியார்களால் இப்பள்ளிக்கூடம் நடைபெறுகின்றது.
            தமிழகப் பழங்குடிகளின் கல்வி முறை பற்றிய செறிவானத் தகவல்கள் புதினங்களில் இல்லை.
3.20.பஞ்சாயத்து
            சோளகர் தொட்டியில் பிரச்சனைக்கு நீதி கேட்பவர்கள் ஒரு படி ராகியை எடுத்துக்கொண்டு கொத்தல்லியிடம் கொடுத்து நீதி வேண்டும் என்கிறார்கள்கொத்தல்லி தலைமையில் இரவு உக்கடத்தீ முன்பு ஊரார் கூடுகின்றனர்நீதி வேண்டுமென கேட்டவர் ஊரார் முன்பு தனது பிரச்சனையை விளக்குவார்பிரச்சனைக்குக் காரணமான நபரையும் ஊரார் முன்பு பொதுவாக விசாரணை செய்கிறார்கள்இரு தரப்பினரின் பதில்களையும் ஆராய்ந்து இறுதியாகக் கொத்தல்லி தீர்ப்புச் சொல்கிறார்விதவை கெம்பம்மாவினால் கூடிய பஞ்சாயத்து இந்த முறையில்தான் கொத்தல்லி தீர்ப்பு சொல்கிறான். (பாலமுருகன்,.2013: 50).
            கொல்லி மலை மலையாளிகளின் பஞ்சாயத்து ஊர் தர்மகர்த்தா தலைமையில் நடைபெறுகின்றதுஎந்தப் பிரச்சனைக்காகப் பஞ்சாயத்து கூட்டப்படுகின்றது என்பதை முதல்நாளே தண்டல்காரன் அறிவித்துவிடுகின்றார்ஊரிலுள்ள சலவைக்கல் மேடையில் பஞ்சாயத்து நிகழ்கிறதுஊர் முழுவதும் மேடை முன்பு கூடியதும் பஞ்சாயத்து தொடங்குகிறதுநியாயம் கேட்டு வந்தவரிடம் தர்மகர்த்தா சில வாசகங்களை கேள்வியாகக் கேட்பதும் நியாயம் கேட்பவர் பதிலாகச் சொல்வதும் வழக்கப்படி கீழ்வருமாறு அமைகின்றதுமேலே ஆகாசம் கீழே பூமிஅக்கினி சாட்சியா நீ சொல்றது நெசந்தானாஏழு தெய்வம் சாட்சியாமேக்குப் பாக்க உள்ள நாச்சியார் சாட்சியா நீ சொல்றது நெசந்தானாஎன்று தர்மகர்த்தா கேட்கிறார்அக்கினி சாட்சியாகவும்நாச்சியார் சாட்சியாகவும் நான் சொல்வது உண்மைதானுங்க என்று நீதி கேட்டு வந்தவன் உறுதி சொல்கிறான்இதே வாசகங்கள் அடுத்தடுத்து விசாரிக்கப்படுகின்ற அனைவருக்கும் பயன்படுத்தப்படுகின்றதுநாச்சியாருக்கு இரண்டு காசும் ஏழு தெய்வங்களுக்கு ஏழு காசும் நீதி கேட்பவனிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றதுநீதி கேட்பவன் தனக்கு ஏற்பட்டுள்ள அநீதியைப் பஞ்சாயத்தில் விளக்குகிறான்சாட்சிகளும் குற்றம் சுமத்தப்படுபவர்களும் விசாரிக்கப்படுகிறார்கள்குற்றம் செய்தவன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் சத்தியத்திற்கு விடுதல் என்றொரு முறையைக் கடைபிடிக்கிறார்கள்குற்றம் சுமத்தப்பட்டவனைக் குளிக்கச் செய்கிறார்கள்கோயிலைச் சுற்றி வரச் செய்கிறார்கள்ஈர வேட்டியில் தணல் கக்கும் நெருப்பைக் கொட்டுகிறார்கள்குற்றம் சுமத்தப்பட்டவன் அவற்றை மார்போடு அணைத்துக்கொண்டு ஊர்கூட்டத்தை மூன்று முறை சுற்றுகிறான்வேட்டியைப் பொத்துக்கொண்டு நெருப்பு கொட்டாவிட்டால் நிரபராதியென உறுதிசெய்யப்படுகிறான்நெருப்பு கொட்டிவிட்டால் தண்டனைக்கு ஆளாக்கப்படுகிறான்இரண்டு நடவடிக்கைகள் இணைந்து தண்டனையாகக் கடைபிடிக்கப்படுகின்றனஒன்று அறிவிக்கப்படும் பெரும் தொகையைக் கொடுக்க வேண்டும்.  இரண்டு கிராமத்தாருக்கும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்திருப்பவர்களுக்கும் பன்றி அடிச்சு களி விருந்து வழங்க வேண்டும். (சின்னப்ப பாரதி,கு. 2008: 40-54).
            மரகதமலை ஹட்டியில் ஹெத்தப்பா கோயில் மைதானத்தில் பஞ்சாயத்து நடைபெறுகின்றதுஊர் காரியங்கள் பற்றிய எந்த முடிவுகளும் இந்தப் பஞ்சாயத்தில்தான் முடிவெடுக்கப்படுகின்றனமணியகாரராகிய கரியமல்லர் என்பவர் பஞ்சாயத்துத் தலைவராக இருக்கிறார்புனித நெருப்பைக் காப்பதற்கான சிறுவனைத் தேர்ந்தெடுத்தல் பற்றி முடிவெடு்ப்பதாயினும் அல்லது மணவிலக்கு கேட்டல் வேறு வகையான பிரச்சனையானாலும் சரி ஊரார் அனைவரும் மைதானத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்கரியமல்லர் மக்களுக்கு விளக்கி முடிவினை அறிவிக்கிறார்.
படகர்களில் திருமணமான ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்துவதில் மனவொற்றுமை இல்லாவிட்டாலும்வேறொருவருடன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ வேண்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தாலும் பஞ்சாயத்தைக் கூட்டி முறையிட்டு விலகிவிடுகிறார்கள்.
            இருளர்கள் பற்றிய புதினங்களில் பஞ்சாயத்து முறை பற்றிய செறிவானத் தகவல்கள் இடம்பெறவில்லை.
3.21.வாய்மொழி வழக்காறுகள்
3.21.1.சொற்கள்
3.21.1.1.ஜாமம் – சோளகர்கள் நேரத்தை ஜாமம் என்கிறார்கள்.
3.21.1.2.கரடி வண்டி – சர்க்கார் பயன்படுத்துகின்ற ஜீப் வண்டியை கொல்லி மலை மலையாளிகள் கரடி வண்டி என்று அழைக்கிறார்கள்.
3.21.1.3.ஹட்டி – படகர்கள் ஊர் என்பதனை ஹட்டி என அழைக்கிறார்கள்.
3.21.1.4.ஹெத்தை – படகர்கள் பாட்டியை ஹெத்தை என்று அழைக்கிறார்கள்.
3.21.1.5.ஹொணே – படகர்கள் மூங்கிலால் செய்யப்பட்டுள்ள பாற்குழாய்.
3.21.1.6.முண்டு – படகர்கள் உடுத்தும் உடைகளை முண்டு என்கிறார்கள்.
3.21.1.7.கசாங்கு – தாணிக்கண்டி இருளர்கள் கிழங்கை கசாங்கு என்கிறார்கள்.
3.21.1.8.டாகு – தாணிக்கண்டி இருளர்கள் கீரையை டாகு என்கிறார்கள்.
3.21.1.9.மட்டை – தாணிக்கண்டி இருளர்கள் பாம்பை மட்டை என்கிறார்கள்.
            தமிழகப் பழங்குடிகள் பற்றிய புதினங்களில் வழக்காற்றுச் சொற்கள் செறிவாக இடம்பெறவில்லை.
3.21.2.பழமொழி
எதிரியின் மீதான கோப நடவடிக்கையில் ஈடுபடுபவனை நிதானப்படுத்துவதற்காக சோளகர்கள் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறார்கள். “கோபத்திற்கு இரண்டு வாய் உண்டுஅது எதிரியை மட்டும் கடிக்காதுஎய்தவனையும் கடித்துவிடும்.” (பாலமுருகன்,.2013: 20) என்று கோபம் பற்றிய அனுபவங்களின் சாராம்சத்தை கொத்தல்லி பேசுகிறார்.
 “கரடி நொளஞ்ச அன்னாசித் தோட்டமும் காவல்காரன் புகுந்த வீடும் காத்து புகுந்த மேகமாயிடும்” (சின்னப்பபரதி,கு.2008: 7) அரசாங்கத்தைப் பற்றி விமர்சித்துப் பேசுகின்ற சூழலில் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறார்கள்.
நீர்கோழிய நெலத்துக்கு வான்னா வருமாநம்மவிதி நம்மைவிட்டு எங்கே போவும்” (சின்னப்பபரதி,கு.2008: 9)
வரும்விதி வந்தால் படும்விதி பட்டுத்தானே ஆகனும்” (சின்னப்பபரதி,கு.2008: 10). ஆகிய பழமொழிகளை விதியை நொந்துகொள்ளும் சூழலில் பயன்படுத்துகிறார்கள்.
மலைக்காரே ஊளச் சேத்துக்கு ஒளிஞ்சு பயந்தான்னா காலச் சோத்துக்கு கடுப்பான் பஞ்சமாயிடும் பாங்க” (சின்னப்பபரதி,கு.2008: 17). உழைக்கத் தயாராக முடியாமல் சோம்பி இருப்பவர்களுக்கு உழைப்பில் ஆர்வமூட்டுவதற்கான சூழலில் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறார்கள்.
அப்பெ அடி மரத்திலே தூங்குனா மவெ முடி கொம்பிலே படுத்திருப்பானுன் சொல்வாங்கோ” (சின்னப்பபரதி,கு.2008: 26) அப்பனையும் மகனையும் ஒப்பிட்டுப் பேசுகின்ற சூழலில் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறார்கள்.
இரும்பெ இரும்புதான் வெட்டனும்எருக்கங்குச்சி வெட்டிட முடியாது.” (சின்னப்பபரதி,கு.2008: 31) சக்திக்கு மீறிய வேலைகளைச் செய்ய முயலாதே என்று அறிவுறுத்துகின்ற சூழலில் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆற்றுப்படுகை மணலானால் அள்ளி செலவிடலாம்அரிச் சட்டி மணலை குருவிச் சட்டியில்தான் அளந்து செலவு செய்ய வேண்டும்” (சின்னப்பபரதி,கு.2008: 55) சிக்கனத்தின் அவசியத்தை உணர்த்த வேண்டிய சூழலில் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறார்கள்.
வயக்காடு பெருத்தவனுக்கு வரப்பு வெளைச்சங்கூட வண்டிப்பாரம் ஏறுமாம்வவுத்துப் பாட்டுக்காரனுக்கு வயலு வௌச்சலுங்கூட வாசக்கோழிக்குப் பத்தாதாம்” (சின்னப்பபரதி,கு.2008: 60) பொருளாதாரத் திட்டங்களை எவ்வளவு உழைத்தாலும் நிறைவேற்ற முடியாத ஏழ்மைச் சூழலை நொந்துகொள்கின்றபோது இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறார்கள்.
கருவாட்ட பாத்து நாயிபோனா கல்லடிதா கெடைக்கும்களவாடரவனைப் பாத்து நாயுபோனாத்தா கருப்பட்டி கெடைக்கும்.” (சின்னப்பபரதி,கு.2008: 64) சாதூர்யமாக நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசுகின்றபோது இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆசாரி பார்வை சம்மட்டி மீதும் உழவன் பார்வை மாட்டின் மீதும் இருக்க வேண்டும் என்பார்கள்” (சின்னப்பபரதி,கு.2008: 98) மாடுகளைக் கவனிப்பதிலுள்ள முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான சூழலில் பயன்படுத்துகிறார்கள்.
குழந்தைகள் மனசு பால்பெரியவர்கள் பேச்சு புளியாக இருக்கக் கூடாதுமனம் கெட்டுவிடும்.” (ராஜம்கிருஷ்ணன்.2001: 47)படகர்கள் தங்களது குழந்தைகளை நல்ல அணுகுமுறையுடன் வளர்க்க வேண்டு்ம் என்பதை உணர்த்த வேண்டிய சூழலில் பயன்படுத்துகிறார்கள்.
மட்டையைக் கண்டால் நட்டம்” (ஆட்டனத்தி.2010: 87) பயணத்தின்போது பாம்பைக் கண்டால் என்ற பழமொழியைச் சொல்கிறார்கள்.
நரம்பில்லாத நாக்கு வரம்பில்லாம பேசாத” (நஞ்சப்பன்,.200: 72) வார்த்தைகளை மற்றவர்கள் வருந்தும்படி அநாவசியமாகப் பேசாதே என்பதை உணர்த்துவதற்காக இந்தப் பழமொழியைச் சொல்கிறார்கள்.
            சோளகர்கள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் பழமொழிகள் பற்றிய செறிவான பதிவுகள் இடம்பெறவில்லை.
3.22.இயல் முடிவுகள்
          இந்த இயலில் ஆய்விற்குரிய ஐந்து புதினங்களிலிருந்து சோளகர்கள்மலையாளிகள்படுகர்கள்இருளர்கள் ஆகியப் பழங்குடி மக்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் ஆராயப்பெற்றிருக்கின்றனவாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளாகிய குடும்பம்உணவுமுறைஉடைபுழங்குபொருட்கள்சமயம்தெய்வம்சடங்குகள்விழாக்கள்கலைஅறிவியல்மருத்துவம்பஞ்சாயத்துவாய்மொழி வழக்காறுகள் என்பனவற்றை விளக்குவதாக  மூன்றாம் இயல் அமைக்கப் பெற்றிருக்கின்றது.
            பழங்குடி மக்களது குடும்ப அமைப்புகளின் இயங்குதலில் ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒருதார மணமுறை இறுக்கமான வடிவத்தை அடையவில்லைஒருதார மணமுறை அதிகாரப்பூர்வமான குடும்ப அமைப்பாக நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும்கூட இறுக்கம் அடையாமல் நெகிழ்வுத் தன்மையுடையதாகவே இருக்கின்றதுபருவம் அடைந்த சிறுவனை ஒரு பெண் திருமணம் செய்து கொள்வதுமூன்று வயது சிறுவனை பதினெட்டு வயது பெண் திருமணம் செய்து கொண்டு உரிமைக்காரர்களின் உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்வதுகணவனைவிட்டு விலகி வேறொரு ஆடவனை திருமணம் செய்து கொள்வது ஆகியன நடைமுறையிலுள்ள ஒருதார மணமுறையின் இறுக்கமடையாதத் தன்மையை நிரூபிக்கின்றனஒருத்திக்கு ஒருவன் என்ற ஒருதார மணமுறையானது பாலுறவு உரிமை வரலாற்றில் இறுதி வடிவமாக இருக்கின்றது. “பாலுறவு உரிமை வரைமுறையற்ற ஆரம்ப நிலையிலிருந்து பல மட்டங்களைக் கடந்து வந்துள்ளதுதாய் சேய் பாலுறவு உரிமை தடைசகோதர சகோதரிகளின் பாலுறவு உரிமை தடை,  இருவேறு கூட்டங்களுக்கு இடையில் வரைமுறையற்ற பாலுறவுஉரிமைபல கணவர் முறைபல மனைவியர் முறைஇறுதியாக ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மட்டும் பாலுறவு உரிமையில்  இணைந்து வாழ்கின்ற ஒருதார மணமுறை ஆகும்.” (புதியவன். 2016: 25).  ஆணின் சொத்தாதிக்க நலனை அடிப்படையாகக் கொண்டு ஒருத்திக்கு ஒருவன் என்றத் திருமண வடிவிலான குடும்ப அமைப்பு தோன்றி நிலைபெற்றிருக்கிறதுபழங்குடி மக்களது குடும்ப அமைப்புகளின் இயங்குதலில் ஒருத்திக்கு ஒருவன் என்ற திருமண அடிப்படை இறுக்கமான வடிவத்தை எட்டவில்லைஒருதார மணமுறை அதிகாரப்பூர்வமான குடும்ப அமைப்பாக நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும்கூட இறுக்கம் அடையாமல் நெகிழ்வுத் தன்மையுடையதாகவே இருக்கின்றதுகணவனைவிட்டு விலகி வேறொரு ஆடவனை திருமணம் செய்து கொள்கின்ற நடைமுறை வடிவானது ஒருதார மணமுறையின் இறுக்கமடையாதத் தன்மையை நிரூபிக்கின்றது.
          சோளகர் தொட்டியில் மழை வேண்டி எங்குசீர்குட்டை என்ற தெய்வத்தை வழிபடுவதற்காக ஆண்களைத் தவிர்த்து பெண்கள் மட்டும் செல்கிறார்கள்ஆண்களும் பெண்களை வழியனுப்பிவிட்டு மணிராசன் கோயிலில் காத்திருக்கிறார்கள்பெண்கள் வனத்தில் நிர்வாண நிலையிலிருந்து வழிபாட்டை முடித்துவிட்டுத் தொட்டிக்குத் திரும்புகிறார்கள்.
          தேன்கனிக்கோட்டையில் இருளர்கள் வாழ்கின்ற பகுதியில் வறட்சிக் காலங்களில் மழை வேண்டி மழை தேவருக்குப் படையலிட்டு வழிபடுகிறார்கள்இந்த வழிபாட்டில் வயதான மூன்று விதவைப் பெண்கள் அழுவதற்காக அழைக்கப்படுகிறார்கள்இந்த வழிபாட்டில் முக்கிய நிகழ்வாக விதவைப் பெண்கள் அழுது வழிபடுவதைக் கருத முடிகின்றது.
          சோளகர் தொட்டியில் பெண்கள் மட்டும் தனியாகச் சென்று வழிபடுவதற்கான வரலாற்றுக் காரணத்தையும் தேன்கனிக்கோட்டையில் விதவைப் பெண்களை அழைத்து அழுது வழிபடச் சொல்வதற்கான வரலாற்று காரணத்தையும் ஆய்வேட்டின் முடிவுரை பகுதியில் அறியலாம்.
            தமிழகப் பழங்குடிகளின் வாழ்வில் தந்தைவழி அதிகாரச் சமூகம் நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் பாலின அதிகாரம் என்பது ஆணாதிக்க நலன் சார்ந்து பெண்கள் மீது சுமத்தப்படுகின்ற ஒடுக்குமுறையாகவே இருக்கின்றது.
தாணிக்கண்டி இருளர்கள், சோளகர்கள் பற்றிய பதிவில் பூப்புச் சடங்குகள் பற்றிய தகவல்கள் பதிவாகியுள்ளன. இவ்வகை சடங்கில் தாய்தலைமையின் கொண்டாட்டத்தையும் தந்தை அதிகாரத்தின் வன்மத்தையும் இணை நிலையாக அறிய முடிகின்றது.
காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்தின் மனிதர்கள் சகமனிதர்களைப் பெறுவதற்குத் தகுதி பெறுகின்றப் பெண்களைக் கொண்டாடத் தொடங்கினார்கள். தாய்தலைமை சமூகத்தில் தோன்றிய இத்தொடக்கமே பூப்புச்சடங்காக உருப்பெற்றது. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தொடங்கிய ஆணதிகார சொத்தாதிக்கச் சமூகம் பூப்புச்சடங்கைத் தமக்குரியதாக உருமாற்றிக்கொண்டுள்ளது. எனினும் தந்தையதிகாரச் சமூகத்தின் வன்மத்தை வெளிப்படையாக அறிய முடிகின்றது.
பூப்பெய்த பெண்ணைக் கொண்டாடுதல் என்பது தாய்தலைமை சமூகத்தின் எச்சமாக இருப்பினும் தாய்மாமனால் குடிசை அமைக்கப்படுவது என்பது தந்தையதிகாரச் சமூகத்தின் பண்பேற்றமாக அறிய முடிகின்றது. பூப்பெய்தப் பெண்ணின் மீது தீட்டு என்ற கருத்தாக்கத்தைச் சுமத்தி அசுத்தப்படுத்தும்போதும், அவளை அமர்த்திக் கொண்டாடப்பட்ட குடிசையை எரியூட்டும்போதும் தாய்தலைமைச் சமூகத்தை அடையாளமின்றி அழிக்கின்ற ஆணாதிக்கச் சமூகத்தின் வன்மத்தை அறிய முடிகின்றது. 
                 சமூகப் பொருளுற்பத்தி அல்லாத சமூகத்தின் அனைத்துத் துறைகளும் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளாக அமைகின்றனதமிழகப் பழங்குடிகள் பற்றிய ஐந்து புதினங்களில் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளும் முழுதளாவிய நிலையில் செறிவாக இடம்பெற்றிருக்கவில்லைவிளையாட்டுஅறிவியல்மருத்துவம்கல்வி முறைவாய்மொழி வழக்காறுகள் போன்ற பல  பண்பாட்டுக் கூறுகளைப் பற்றிய செறிவானத் தகவல்களை எடுத்தியம்புகின்றனவாக புதினங்கள் அமையவில்லைபண்பாட்டுக் கூறுகளுக்கு இடையிலான விடுபடுதல்களும்இடைவெளிகளும் நிறைந்தனவாகப் புதினங்கள் அமைந்திருக்கின்றனஇந்தப் புதினங்களைப் படைத்த ஆசிரியர்கள் பிறப்பின் அடிப்படையிலும் வாழ்நிலை அடிப்படையிலும் பழங்குடிச் சமூகங்களைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதும் இதற்குக் காரணமாக இருக்கின்றனபழங்குடிகளின் வாழ்வியல் பொருளாதாரப் பண்பாட்டுச் சூழல்களை முழுதளாவிய நிலையில் உணர்நிலை அறிவாகவும்ஆழ்மன உணர்நிலை அறிவாகவும் உணர்ந்திருப்பதற்கான வரலாற்று நிலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கவில்லை என்ற காரணங்களால் இத்தகையச் செறிவின்மை அமைந்திருக்கின்றன

No comments:

அதிகம் படித்தவை