எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, June 2, 2017

புதின ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள்

புதின ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள்
.பாலமுருகன்
          சோளகர் தொட்டி என்ற புதினத்தின் ஆசிரியர் .பாலமுருகன் ஆவார். இவர் ஈரோடு மாவட்டம் பவானியில் பிறந்தவர். பவானி அரசுப் பள்ளியில் படித்தார். கோவை சட்டக்  கல்லூரியில் படித்தபோது இலக்கியங்கள் படிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார். 1993 ல் வழக்கறிஞராகத் தொழில் செய்யத் தொடங்கினார். பி.யூ.சி.எல். என்னும் மனித உரிமை அமைப்பின் மாநிலச் செயலாளர் பொறுப்பில் செயல்படுகிறார்.
கு.சின்னப்ப பாரதி
            சங்கம் என்ற புதினத்தின் ஆசிரியர் கு.சின்னப்ப பாரதி ஆவார். இவர் சேலம் மாவட்டம் நாமக்கல்லைச் சேர்ந்த பரமத்தி என்னும் ஊரைச் சார்ந்தவர். மே மாதம் 2ம் நாள், 1935ல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, சுரங்கம் ஆகிய புதினங்களைப் படைத்துள்ளார். தமிழ்நாட்டின் முதுபெரும் தமிழ் புதின எழுத்தாளரும் அரசியல்வாதியும் ஆவார்இடது சாரி இலக்கியங்களைப் படைத்தவர். இவரது புதினங்கள் இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்கள மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ராஜம் கிருஷ்ணன்
            குறிஞ்சித்தேன் என்ற புதினத்தின் ஆசிரியர் ராஜம்கிருஷ்ணன் ஆவார். இவரது வாழ்நாள் 1925 முதல் அக்டோபர் 20, 2014 வரையாகும். மூத்த தமிழகப் பெண் எழுத்தாளர் ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டக் காட்டுகின்றன. 1925ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15வது வயதிலேயே இவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின்னர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார். 1973ல் வேருக்கு நீர் என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார். தொடர்ந்து பல விருதுகளைப் பெற்றவர் 2014 அக்டோபர் 20ல் இயற்கை எய்தினார்.
.நஞ்சப்பன்
      பனியில் பூத்த நெருப்பு என்ற புதினத்தின் ஆசிரியர் . நஞ்சப்பன் ஆவார். இவர் பென்னாகரம் தொகுதியில் எம்.எல்.., பொறுப்பை 2016ல் பெற்றார். . நஞ்சப்பன், எம்.எல்.., மாநில செயற்குழு உறுப்பினராக இந்திய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சி, தமிழ் மாநிலக் குழுவில் செயல்பட்டார். தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் பழங்குடியினர் பண்பாடு என்ற சிறந்த கட்டுரையை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை thoguppukal.wordpress.com ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டனத்தி

        வனம் என்ற புதினத்தின் ஆசிரியர் ஆட்டனத்தி ஆவார். இவரது இயற் பெயர் திரு..தண்டபாணி ஆகும். கோவை மாவட்டத்தைச் சார்ந்தவர். வனத்தறையில் வனச்சரகர் அலுவலராக முப்பத்து நான்கு ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு கண்டுள்ளார். அரசு தீட்டிய காடு வளர்ப்புத் திட்டம், வனத்தில் தாவரங்கள் விலங்குகள் பாதுகாப்பு நெறிமுறைகள், பழங்குடிகளுக்கு குடியிருப்பு ஏற்பாடுகள் செய்தல், விளை பொருட்களை முறைபடுத்தி அரசு வருவாயில் சேர்த்தல் போன்ற செயல்முறைகளில் பங்காற்றியுள்ளார். தீராநதி போன்ற சிற்றிதழ்களில் இவரது சிறுகதைகள்  வெளிவந்துள்ளன.

... 

துணை நூல்கள்

No comments:

அதிகம் படித்தவை