எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, June 27, 2016

அறிவியல் கலை இலக்கியத்தின் சமூகவிஞ்ஞானக் களம்!



அறிவியல் கலை இலக்கியத்தின் சமூகவிஞ்ஞானக் களம்!
சமூக அக்கறையுடைய படைப்பாளர்கள் பங்கேற்கவும்…

படைப்பாளர்களை பேரன்புடன் வரவேற்கின்றோம்…
சகமனிதர்களின் உணர்வுகளை, சிந்தனைகளை, செயல்களை புதுப்பித்துக் கொண்டிருப்பதும், சமூகத்தின் இயங்கு திசையைச் சரிசெய்து கொண்டிருப்பதும் அறிவியல் கலை இலக்கியப் படைப்புகளின் கடமை என்பதை உணர்த்த வாருங்கள்…
இலாப வெறிபிடித்த  அதிகாரக் கோட்டைகளில் பராமரிக்கப்படுகின்ற அறிவியல் கலை இலக்கியங்களை விடுதலை நேசமிக்க சகமனிதர்களிடமும் சமூகவிஞ்ஞானிகளிடமும் ஒப்படைக்க வாருங்கள்…
அறிவியல் கலை இலக்கியங்களின் சுயமரியாதை, பொழுதை அழிக்கின்ற பொழுதுபோக்கு வடிவங்களில் அல்ல. மாறாக, பொழுதை ஆக்கப்படுத்துவதிலும் சகமனிதர்களது சமூக உணர்வுகளைப் புத்துயிர் பெறச் செய்வதிலும் அடங்கி இருக்கிறது என்பதை நிரூபிக்க வாருங்கள்…
வாசிப்பாற்றலும் படைப்பாற்றலும் வளர்ச்சிபெற வாய்ப்பில்லாத உழைக்கின்ற பலகோடி மக்கள் ஒருபுறம்!
வாசிப்பும் படைப்பும் மட்டுமே வாழ்க்கை என வாழ்கின்ற அறிவுஜீவி குழுக்கள் மறுபுறம்!
அவர்களின் படைப்புகள் இவர்களின் பலருக்கு மதிப்பற்றதாகத் தெரிகிறது…
இவர்களின் படைப்புகள் அவர்களின் பலருக்கு அறிய முடியாத பிரமாண்டமாகத் தெரிகிறது…
இரண்டுக்கும் இடையில் அறிவியல் கலை இலக்கியங்கள் இலக்குகளை எட்ட முடியாமல் தடுமாறுகின்றன…
நமது சந்திப்பு இந்தத் தடுமாற்றத்தை நீக்க வேண்டும்!
நமது வளர்ச்சி இலக்குகளை தொட்டுவிட வேண்டும்!
பறையிசைத் தலைவன் தனது இசையாட்டக் குழுவில் பலவீனமானவர்களையும் பலமானவர்களையும் ஒரே வரிசையில் சமமாக ஆடிவரச் செய்வாரே அதுபோல நமது படைப்புகள் அமைய வேண்டும்.
நமது படைப்பாற்றல் உழைக்கின்ற மக்களின் இரசனைக்கும் உயிர்ப்புடையதாக வேண்டும், அறிவுஜீவிகளின் ரசனைக்கும் மதிப்புடையதாக வேண்டும்…
உழைக்கின்ற மக்களே அறிவுஜீவிகளாகவும்
அறிவுஜீவிகளே உழைக்கின்ற மக்களாகவும்
பக்குவம் பெற்றுவிட்டால்,
படைப்புலகம் எத்தகைய அறிவியல் கலை இலக்கியப் படைப்புகளை வெளிப்படுத்துமோ அத்தகைய வெளிப்பாடுகளை நாம் துவக்கியாக வேண்டும்!
நமது துவக்கம் அறிவியல் கலை இலக்கியத்தின் சமூகவிஞ்ஞான இலட்சியங்களை நிச்சயம் நிறைவேற்றும்!
சமூக அக்கறையுடைய படைப்பாளர்களின் படைப்புகள் வெற்றியை அடைவது உறுதி!
பங்கேற்கின்ற படைப்பாளர்கள் அறிவியல் கலை இலக்கியம் பற்றிய உங்கள் நோக்கத்தைப் பதிவு செய்யுங்கள். நமது உரையாடல் சமூகவிஞ்ஞான இலட்சியங்களை நோக்கி விரையட்டும்.
அறிவன்புடன் புதியவன்

No comments:

அதிகம் படித்தவை