எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Thursday, May 11, 2017

சமூகக் கதைகளின் சுவையுடன் சமூகவிஞ்ஞானத் தத்துவ விதிகள்

சமூகக் கதைகளின் சுவையுடன் 
சமூகவிஞ்ஞானத் தத்துவ விதிகள்

இது சமூகவிஞ்ஞானத் தத்துவத்தின் எளிய அறிமுகம் (Social scientism). விஞ்ஞானம் இரண்டு வகைப்படும். 1.இயற்கைவிஞ்ஞானம், 2.சமூகவிஞ்ஞானம்இவை இரண்டையும் உணர்வது நமது நோக்கம்ஆனால்இரண்டு விஞ்ஞானங்களுக்கும் பொதுவாக இருக்கின்ற சமூகவிஞ்ஞானத் தத்துவத்தையே இங்கு முதன்மையாக உணரப்போகிறோம். சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்பவர்களுக்கு சமூகவிஞ்ஞானப் பயிற்சிகள் இயல்பாகக் கிடைத்துவிடும். இத்தகைய மேன்மையான இயல்பை அடைகின்ற முயற்சியுடன் நம் உரையாடலைத் தொடங்குவோம்.
            சாதாரண மனிதர்களால் விஞ்ஞானியாக முடியமா? இந்த கேள்வியே விரக்தியான மனநிலையை வெளிப்படுத்துகிறது. ஆனால் உண்மை இதற்கு மாறுபட்டது. சாதாரன மனிதர்களே சாதனையாளர்களாக மாறுகிறார்கள். ஏனெனில் சரித்திரம் என்பது சாதாரண மனிதர்களால் படைக்கப்படுவதே. எனவே சாதாரண விஞ்ஞானியல்ல, நம்மால் சமூகவிஞ்ஞானியாகவும் நிச்சயம் மாற முடியும்.
            விஞ்ஞானியாவதோ, சமூகவிஞ்ஞானியாவதோ அத்தனை கடினமல்ல. குழந்தையை நினைத்துப் பாருங்கள். அது உணவைக் கையிலெடுத்துச் சாப்பிடக் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்கிறது. இந்த முயற்சி எவ்வளவு அழகாகவும் கடினமாகவும் இருக்கிறது. எதிர்காலத்தில் எவ்வளவு எளிமையாகச் சாப்பிடுகிறது. நாமும் இப்படித்தான் சாப்பிடப் பழகினோம். பயிற்சி எல்லாவற்றையும் எளிமைப்படுத்தி விடுகிறது. இது போலவே சமூகவிஞ்ஞானியாவதும் எளிமையானதே.
            மனித உடலின் இயக்கத்தில் மூளையின் சிறப்பு வேலை என்ன? இதற்கான விடை எல்லோருக்கும் தெரிந்ததே. கவனித்தல், அறிதல், புரிந்துகொள்ளுதல், உணர்தல், செயல்படுதல் இவையே மனித மூளையின் இன்றியமையாத வேலைகள். இதன் பயணத்திற்கு எல்லை கிடையாது. எல்லை கடந்து பயணிப்பதே இதன் இயற்கைத் தன்மை. மனித மூளையின் இயற்கைத் தன்மைக்கு எதிராக மனிதர்களையே மாற்றியிருக்கிறது இன்றைய சமூகம். இதன் விளைவாக நாம் அறிவுச் சோம்பேறிகளாகவும், குருட்டுச் சிந்தனையாளர்களாகவும் இருக்கின்றோம். இன்று மாறுவதற்குத் தயாராகிவிட்டோம்.
            இனி சமூகவிஞ்ஞானியாக மாறுவதற்கு முயற்சிப்போம். நமது சிந்தனைமுறையை ஒழுங்குபடுத்த ஐந்து வழிமுறைகள் தேவைப்படும். வழிமுறைகள் ஐந்தும் மிக எளிமையானவை. இவற்றைப் பயிற்சி செய்ய வேண்டும். இந்த வழிமுறைகள் நம் சிந்தனைகளில் கலந்திருந்தால் போதும். நாமும் விஞ்ஞானிகளே.
            வழிமுறைகள் – 5
1.இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல்
2.பொருளையும் கருத்தையும் உணர்தல்
3.வரலாற்றை உணர்தல்
4.பொதுத்தன்மையையும் தனித்தன்மையையும் உணர்தல்
5.நடைமுறையையும் தத்துவத்தையும் உணர்தல்
            இந்த வழிமுறைகளைச் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். உலக வரலாற்றிலேயே உண்மை அறிவதற்கான சிந்தனைமுறையாக இவை நமக்கு கிடைத்திருக்கின்றன. இயற்கை விஞ்ஞானத்திற்கும் சமூகவிஞ்ஞானத்திற்கும் இவையே அடிப்படை. இந்த வழிமுறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் வழியில் சிந்தித்துப் பழக வேண்டும். இந்த வழிமுறைகளால் செய்யப்பட்டுள்ள சிந்தனை ஆற்றலின் வழியாக உலகைப் பார்ப்பதற்குக் கற்றுக்கொண்டால், நாம் சமூகவிஞ்ஞானிகளாகச் செயல்படத் துவங்கியுள்ளோம் என்று அர்த்தம்.
            இந்த இலக்கை அடைய நாம் ஒத்துழைக்க வேண்டும். கற்றுக்கொள்ளும் வழிமுறைகளை நமக்கு நாமே பயிற்சி செய்ய வேண்டும். நம் சிந்தனைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும். சகநண்பர்களின்  உதவியுடன் நம் சிந்தனைப் பயிற்சியைச் சரி செய்துகொள்ள வேண்டும். சகமக்களாக நாம் இணைந்து செயல்படுவது அவசியம். ஒற்றுமையே நம் பயிற்சியின் வெற்றியைத் தீர்மானிக்கும். மற்றபடி இங்கு கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகள் அனைத்தும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு மட்டுமே. சோர்வடையாமல் படிப்போம். நமக்குத் தெம்பூட்ட பல சுவையான உணவுகளும் நல்லக் கதைகளும் எடுத்துக்காட்டுகளாக வரப்போகின்றன.

            இனி ஐந்து வழிமுறைகளையும் ஒவ்வொன்றாக எடுப்போம். நம் சிந்தனைக்குள் கலக்க முயற்சிப்போம்.


No comments:

அதிகம் படித்தவை