எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

அமிர்தம் தந்த ரகு




அமிர்தம் தந்த ரகு
புதியவன்

நமது சகமனிதர்களது நேர்மையான உணர்வுகளைக் கேளுங்கள்...
நமது சமூகத்தின் இதயத்தைத் தொட்டுக் கேளுங்கள்...

வளர்ந்து வரும் மாணவர்களிடம்
இந்தச் சமூகம் எவற்றை எதிர்பார்க்கின்றது
என்பதைக் கேளுங்கள்..

வருத்தப்படாத வாலிபர் சங்கங்களை அல்ல,
சமூக அநீதிகளைக் கண்டு
வருத்தப்படுகின்ற வாலிபர் சங்கங்களை!

கொதிப்படைந்துள்ள மாணவர் உலகத்தை எதிர்பார்க்கின்றது...

சமூகக் கொடுமைகளைச் சரி செய்கின்ற
சமூக அறிஞர்கள எதிர்பார்க்கின்றது...

தொன்மைக் காடுகளில் உலாவி வளர்ந்த
மனித மூதாதையர்களின் வீரப்பெண் தலைமையை எதிர்பார்க்கின்றது...

பழங்குடி முன்னோர்களிடம் பிரகாசிக்கின்ற
சகோதரப் பாசத்தையும்
ஒற்றுமையின் நேசத்தையும்
எதிர்பார்க்கின்றது...

சமூகத்தின் அத்தனை எதிர்பார்ப்புகளையும்
நெஞ்சில் சுமந்து திரிந்த
எங்கள் இளந்தோழனை
மாணவர் தலைவனை
இயற்கை அரவணைத்துக் கொண்டது

SUMS ரகுவின் இறப்பை
ஏற்க முடியாத நெஞ்சங்கள் ஏராளம்!

அவன் விட்டுச் சென்றவற்றைத்
தேடிப் பார்க்கிறோம்...

அவனது நடனநடையைக்
காற்றுக்குக் கொடுத்துவிட்டான்

வசீகரிக்கும் புன்னகையை
மின்னலுக்குக் கொடுத்துவிட்டான்

இனிய குரலை
பறவைகளுக்குக் கொடுத்துவிட்டான்

போராட்ட வீரத்தை
ஆர்ப்பாட்ட உரைவீச்சை
மக்களிடம் கொடுத்துவிட்டான்

அந்த இளம் சமூகவிஞ்ஞானியின்
பேருயிரை விட்டச் சிற்றுடல்
மண்ணில் விதைந்தபோது
எம்மிடம் விட்டுச்சென்றது
ஒன்றை மட்டுந்தான்!
சமூகத்தின் எதிர்பார்ப்புகள்...

எம் இளந்தோழனின் நினைவுகளாக
எங்களிடம் இருப்பவை
சமூகத்தின் எதிர்பார்ப்புகள்!

சமூகத்தின் எதிர்பார்ப்புகளை
அவிழ்த்துப் பார்க்கிறோம்...
சமூகவிஞ்ஞானிகளின் இலட்சியங்கள்
அமிர்தமாக இருக்கின்றன!

அருகில் வாருங்கள்
பெற்றுக் கொள்ளுங்கள்

மணிமேகலையின் அட்சயப்பாத்திரத்தில்
அமிர்தம் அருந்தியதுண்டா?
இயேசுவின் பழரசத்தைச்
சுவைத்துப் பார்த்ததுண்டா?
இளம் சமூகவிஞ்ஞானி
விட்டுச்சென்றுள்ள அமிர்தத்தை
அருந்த வாருங்கள்...

நமக்காக நாளை மலரும்
அடிமைத்தனமற்ற பொன்னுலகம்!

No comments:

அதிகம் படித்தவை