எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, June 27, 2016

உங்களுக்குத் தெரியுமா?




     உங்களுக்குத் தெரியுமா? உங்கள் கைகளில் போராட்டம் கனிந்திருக்கிறது. பாராளுமன்ற நடிகர்களும் பணவெறி பிடித்த உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளும் நமது கரங்களால் அரைவாங்கிச் சாகக் கடமைப்பட்டவர்கள். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த அரசு நம்மிடம் அடிவாங்கப் போவது உண்மை. மனிதகுல விரோதிகளுக்கு எதிராக காலந்தோறும் போராடிய மூதாதையர்களின் ஆவேசம் நமது மௌனத்திற்குள் உரைந்திருப்பதை இன்னும் அறியவில்லையா நீங்கள்! பொதுமக்களாகிய நாம் சமூக அறிவிற்குக் கடமைப்பட்டவர்கள் அல்லவா! எனவே அறிந்துகொள்வதற்கு அவசியம் இருக்கின்றது.


1. கல்வியை முழுவதுமாகச் சேவை துறையிலிருந்து வியாபாரத் துறைக்கு மாற்றியிருக்கிறார்களே! இதுபற்றி நீங்கள் அறிந்ததை எங்களுக்கு விவரிக்க முடியுமா?..
2.  “எங்கத் தலைமுறையில எம் பிள்ளதான் முதல் முறையா பட்டம் படிச்சிருக்கு..” என்று அடிவயிற்றின் உயிர்துடிப்பிலிருந்து பெருமையோடு சொல்கிறீர்களே… உங்கள் பேர பிள்ளைகளின் உயர் கல்வியின் உரிமைக்கு அரசு WTO-GATS ஒப்பந்தத்தில் சங்கு ஊதிவிட்டதே! இந்தத் துயரத்தை நீங்கள் விவரிக்க முடியுமா?
3. UGC எனும் பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவியுடன் உயர்கல்வி பயிலும் நண்பர்களே! UGC ஐ கலைத்துவிட்டு தேசிய உயர்கல்வி ஆணையத்தை உருவாக்க அரசு ஏன் முயல்கிறது என்பதை விளக்க முடியுமா எங்களுக்கு?..
4. 150 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த உயர்கல்வியையும் வியாபாரம் செய்யலாம் என்ற ஒப்பந்தத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை கென்யாவில் டிசம்பர் 2015ல் தீர்மானிக்கப் போகிறார்களே அந்தக் கதையை நீங்கள் எங்களுக்குச் சொல்ல முடியுமா?..
எங்களது சிற்றறிவை உங்களது உரையாடல்களில் உரசிப்பார்க்க அழைக்கிறோம்.
      அடக்குமுறைகள் அழுத்தம் தருகையில் போராட்டங்கள் பிரசவமாகின்றன. சுகாதாரமான சுற்றுச்சூழல், சுயமரியாதையுடைய மனிதர்கள், தேவைக்கேற்ற பொருளாதாரம், சமூக அறிவிற்கான கல்வி உரிமை, உழைப்பின் அங்கீகாரத்திற்கு வேலைவாய்ப்பு என அனைத்தும் மறுக்கப்படுகின்ற சமூகத்தில் நமது உள்ளத்தால் உணரப்படுவது அடக்குமுறையல்லவா! எனவே நீங்கள் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கைகளில் போராட்டம் கனிந்திருக்கிறது.
SUMS சமூகவிஞ்ஞான மாணவர்கள் மட்டுமல்ல, மற்றச் சமூகவிஞ்ஞான அமைப்புகளும் உங்களோடு பேச விரும்புகிறார்கள். மனம் விட்டுப் பேசாமல் நமக்கு விடுதலை சாத்தியமல்ல. கல்வியில் மட்டுமல்ல, சமூகத்தில் எந்த விடுதலையும் சாத்தியமல்ல.
சமூக விடுதலைக்கான கல்வியை முன்னெடுப்போம்!
மெக்காலே வியாபாரக் கல்வியை வேரறுப்போம்!
நமது அறிவும் விரிந்த உரையாடல்களும் சமூக விடுதலையைச் சாத்தியப்படுத்தட்டும்!
என்றும் பேரன்புடன் சமூக அக்கறையுடைய மாணவர்கள்…
     

No comments:

அதிகம் படித்தவை