எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, May 12, 2017

விதி-1.1.3 நட்பு முரண்பாடும் x பகை முரண்பாடும் (சம்பவம் 2) (சிறுகதை 3)

விதி-1.1.3 நட்பு முரண்பாடும் x பகை முரண்பாடும் (சம்பவம் 2) (சிறுகதை 3)
        குரங்குகள் நிறைந்த அழகர் மலை. அழகான குழந்தை அடம்பிடிக்கிறது. அடிகூட வாங்கினாலும் உண்ண மறுக்கிறது. நெய் மணக்கும் பருப்புச் சாதம். குழந்தைக்குப் பிடிக்காதது ஆச்சரியந்தான். குழந்தையாக நாம் இருந்திருந்தால் தட்டோடு தின்றிருப்போம். எனக்கு! உனக்கு! என்று சண்டைவேறு நிகழ்ந்திருக்கும். சரி, குழந்தையைக் கவனிப்போம். அன்னை ஊட்ட, குழந்தை மீண்டும் துப்புகிறது. குழந்தை துப்ப, அன்னை மீண்டும் ஊட்டுகிறாள். இந்த வேடிக்கையை என்னவென்பது. அன்னையின் நோக்கம் குழந்தையை உண்ண வைப்பதில் இருக்கிறது. இறுதி முயற்சியாக  குழந்தையை அரட்டுகிறாள். இதற்கிடையே குரங்குகளின் தொல்லை. குரங்குகளின் நோக்கம் உணவைப் பறிப்பதே. ஒரு கையில் சோறும் மறுகையில் கோலுமாக நிற்கிறாள் தாய். முகம் மட்டும் கோபத்தில் சிவந்துள்ளது. இந்தக் காட்சியிலிருந்து நட்புxபகை முரண்பாடுகளை உணரலாம்.
            . உணவூட்டும் அன்னைக்கும் உண்ண மறுக்கும் குழந்தைக்கும் சண்டை நிகழ்கிறது. இது நட்பு முரண்பாடு.
            . உணவைப் பறிக்கும் குரங்கிற்கும் கோலை உயர்த்தும் அன்னைக்கும் சண்டை நிகழ்கிறது. இது பகை முரண்பாடு.
            சரி, சகமக்களைக் கவனியுங்கள். மலைக் காடுகளில் இரவு நேர வண்டுகளின் கரகரப்பு ஓசைப் போல கேட்கிறது, மக்களின்  பேச்சு. இரவு பதினொன்றரை மணிவரை என்ன பேச்சு? தெருவே பேசுகிறது! ஆறு மணிக்குப் போன கரண்ட்டு இன்னும் வரவில்லை. தமிழ்நாட்டில் கரண்ட்டு போனால் திரும்பி வருவது சந்தேகந்தான். பிறகு தூங்கவா முடியும்! இப்படி அலுத்துக்கொண்டார்கள், இரண்டு பக்கத்து வீட்டுப் பெண்கள். அரசை நாறடித்துப் பேசினார்கள். அவர்களின் பேச்சை சின்னத்திரையும் அவ்வப்போது அலங்கரித்தது. இரவு 12.10க்கு கரண்ட்டு வந்துவிட்டது. தூக்கம் இருவரையும் பிரித்தது. விடிந்ததும் வேலையில் மும்முரமானார்கள். அவரவர் வீட்டில் அவரவர் வேலை. இந்தத் தோழிகளைச்  சண்டை மூட்டத் தெருக்குழாய் காத்திருந்தது. அடிகுழாயில் சண்டையிடும் நமது பெண்களின் வலிமையைச் சொல்லித் தெரிய அவசியமில்லை. நேற்று முகம் நக பேசியவர்கள் இன்று முகம் சீறிப் பேசுகிறார்கள். நாட்கள் ஓடியது. இவர்கள் முகம் பார்த்துப் பேசாத ஒரு மாத காலத்திற்குள் இவர்களை இணைப்பதற்காக ஒரு பிரச்சனை முளைத்திருந்தது.
            சிறுநீரகக் கோளாரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து நாற்பதாக உயர்ந்துவிட்டது. இவர்கள் பகுதியில் நீர் நஞ்சாக மாறியிருப்பதே காரணமாம். தொழிற்சாலைகளின் கழிவுகள் இதைச் சாதித்திருக்கின்றன. தொழிற்சாலைகளுக்கு எதிராக மக்கள் களமிறங்கினார்கள். அரசும் களமிறங்கியது. தொழிற்சாலை முதலாளிகளிடம் நல்ல விலைக்கு பேரம் பேசி காவல்துறையைக் குவித்திருந்தது. வேட்டைக்காரனின் கட்டளைக்காக நாய் காத்திருப்பதைப் போல, வேட்டைப் பொருளுக்காக  வாலைக் குழைந்து குழைந்து ஆட்டுவதைப் போல, காவல்துறையினர் தயார் நிலையில் இருந்தனர். காவல்துறை உங்கள் நண்பன்! இந்த வாசகத்திலுள்ள உங்கள் என்ற சொல் நிச்சயம் மக்களைக் குறிப்பதல்ல. இந்த உண்மையைப் போராட்டக் களம் பலமுறை உணர்த்தியிருக்கிறது. மீண்டும் உணர்ந்தனர் மக்கள். அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். தங்கள் போராட்டத்தின் நியாயத்தை விண்ணதிர முழங்கினர். இந்தப் போராட்டக் களத்தில் தேடிப்பாருங்கள். நமக்கு அறிமுகமான இருவரின் குரல்கள் கலந்திருப்பதைக் கவனிக்க முடிகிறதா? இவர்களை நம்மால் அடையாளம் காண முடியும். கரண்டு இல்லாத இரவில் சிரித்துப் பேசினார்களே.
தண்ணீருக்காக குழாயடியில் சண்டைப் போட்டார்களே. அந்தப் பெண்கள்தான் இந்த இருவர். முறைத்துக்கொண்டு நிற்கிறார்கள். எதிரிகளாய் அல்ல, எதிர்ப்பவர்களாய்!
            இது சமூகத்தின் எதார்த்தமான சூழல்களில் ஒன்று. இந்தச் சூழல்களிலிருந்து நட்புxபகை முரண்பாடுகளைக் கணக்கிட முயல்வோம். பக்கத்து வீட்டு நண்பர்களாக இருக்கின்ற இரண்டு பெண்களுக்கு இடையில் சண்டை நிகழ்ந்துள்ளது. இந்தச் சண்டையே நட்பு முரண்பாடாக இருக்கின்றது.

            அரசின் உண்மையான முகத்தை உணர்கின்ற மக்களுக்கும், மக்கள் நலனில் அக்கறையற்ற அரசிற்கும், ஒட்டிக்கிடந்தப் போலி நட்பும் உடைந்துபோனது. மக்களுக்கும் அரசுக்கும் இடையில் சண்டை நிகழ்கிறது. இந்தச் சண்டையே பகை முரண்பாடாக இருக்கிறது.

            இனி இயங்குதலின் இரண்டாம் தன்மை. இப்பொழுது முரண்பாட்டிலிருந்து ஒரு அடி தள்ளி நின்று கவனிப்போம்.


No comments:

அதிகம் படித்தவை