எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Thursday, May 11, 2017

காரணமானவர்களை நினைத்து

காரணமானவர்களை நினைத்து

இணையதளம்தொலைக்காட்சிவானொலி மற்றும் பெருத்த சிறுத்த ஊடகங்களின் உலகப்பார்வையே சகமக்களின் உலகப்பார்வையாக இருக்கின்றனசினிமாக்கள்சின்னத்திரைகள்விளம்பரங்கள்செய்திகள்உண்மைகளுக்கு எதிரான நேர்மையற்ற பொழுதழிப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றின் கலவையான உலகப்பார்வைகளே சகமக்களுக்கு அறிவொளி போன்று ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றனஎதார்த்த வாழ்வின் உண்மைகளை அறிந்துணரும் ஆற்றல் இன்னும் மக்களுக்கு கைகூடவில்லை.
            சதந்திரமான அறிவியல் பார்வையை ஏன் இன்னும் எட்ட இயலவில்லைசுதந்திரம் என்பதன் அர்த்தம் தான்தோன்றித்தனம் என்பதல்லசுதந்திரம் என்பது சுயக்கட்டுப்பாடுஅறிவியல் உண்மைக்குக் கட்டுப்படுகின்ற உலகப்பார்வையை சகமக்களிடம் பலப்படுத்த வேண்டும்சகமக்களின் அறிவியல் உணர்வை வளர்த்தெடுப்பதும்அவர்களின் உலகப்பார்வையை சமூகவிஞ்ஞானப் பார்வையாக மெருகேற்றுவதும் சமூகவிஞ்ஞானிகளின் அதிமுக்கியக் கடமை.
            உலகளாவிய வியாபாரப் பெருநிறுவனங்களின் பாராளமன்ற அதிகாரத்திலான ஊடகங்கள் என்ன செய்கின்றனமோசடித்தனமான தகவல்களை செயற்கைகோள் உதவியுடன் நம் மூளைக்குள் வலிமையாகத் திணிக்கின்றனஇந்தச் சூழலில் நாம் சமூகவிஞ்ஞான நிலையிலிருந்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்கடமை உணர்வோடு எழுத முயன்ற எனது முயற்சியை சிறு நூலாக மாற்றுதல் நோக்கி முறைபடுத்தியவர் அன்பு அண்ணன் பிரசன்னா (முகம் பதிப்பகம்). இன்று இச்சிறு நூல் சமூகவிஞ்ஞானிகளின் சிறு ஆயுதமாக விளங்க முடிகிறதுஇதற்கு முழுமுதல் காரணம் இவரேஅண்ணன் பிரசன்னாவிற்கு அன்பார்ந்த நன்றி!
            பார்வை  நூல்களுக்கு வழிகாட்டி என் முயற்சியை பக்குவப்படுத்திபொறுப்போடும் அக்கறையோடும் இந்நூலைத் திருத்தம் செய்துஇறுதிபடுத்திய நெறியாளர்தோழர் காமராசு (முகம் பதிப்பகம்அவர்களுக்கும்மேலும் முகம் பதிப்பகத்தார் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
            எனது முயற்சியை அங்கீகரித்து படைப்புகளை வெளியிட்டு ஊக்கப்படுத்திய SUMS இன் சாளரம்காக்கைச் சிறகினிலேபுதுப்புனல்புதிய ஆசிரியர்மீண்டும் அகரம்புதிய கோடாங்கிநற்றிணைஉங்கள் நூலகம் போன்ற சிற்றிதழ்களுக்கும் ஆய்விதழ்களாகிய புதிய பனுவலுக்கும் ஊடாட்டத்திற்கும் நன்றி!
            முதல்முதலாக எழுதும் ஆற்றலை என்னிடத்தில் உணரச் செய்த நாட்டுப்பறவியல் அறிஞர் பேராசிரியர் .முத்தையா அவர்களுக்கு எனது மறக்க முடியாத நன்றி!
            “எழுத்தாளனாக அங்கீகாரம் பெறுவீங்க சிவக்குமார்” என்று நம்பிக்கையோடு என்னை வாழ்த்தி ஊக்கப்படுத்திய தமிழ் மக்களின் மானிடவியல் அறிஞர் முனைவர் பக்தவத்சலபாரதி ஐயா அவர்களுக்கு பணிவன்புடன் நன்றி!
            எனக்கு சமூகவிஞ்ஞானத்ததைக் கற்றுக் கொடுக்கின்ற தாயாகவும்செயலுக்கு வழிகாட்டுகின்ற விளக்காகவும் விளங்கிய பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்திற்கும்நான் சார்ந்திருக்கின்ற அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கும் (புதுச்சேரிநன்றி!
            நான் எழுதியதை வாசித்தும்விமர்சித்தும்திருத்தியும் என பல வகையில் ஒத்துழைத்து இச்சிறு நூலிற்குப் பங்காற்றியவர்களை நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளேன்
            உன் எழுத்திற்கு முதல் ரசிகை என்று கூறி மகிழ்கின்ற கே.ருக்மணி (என்னைப் பெற்றெடுத்தத் தாய்), தந்தை .கேசவன்அண்ணன் நாகராஜன்அண்ணி வினிபாஇணையள் சௌந்தரிசிவா.
            என் தாய் தந்தைக்கு நிகராக புதுச்சேரியில் என்னை கவனித்துக் காக்கின்ற செ.கலைமணிசா.செல்லப்பன்.
            எனது இரவு நேர பாதுகாவலர் பணியிடமாகிய மகளிர் தொழில் நுட்பக் கல்லூரியிலுள்ள மதிப்பிற்குரிய ஆசிரியர்களும்அலுவலர்களும்நட்பிற்குரிய மாணவியர்களும்குறிப்பாக கட்டுமானக் கலையியலின் துறைத்தலைவர் பிரபுகணினி துறை ஆசிரியர் முருகன்மொழிநடையை மதிப்பிட்டு உதவிய ஓட்டுனர் சீனு.
            புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள பேராசிரியர்கள்அலுவலர்கள்குறிப்பாக நாட்டுப்புறவியலறிஞர் .பிலவேந்திரன்நூலகர் கு.இராஜேந்திரன்.
            புதன் வட்டம்தேடலை நோக்கி ஆகியவற்றில் இயங்குகின்ற சக ஆய்வாளர்கள்குறிப்பாக விஜயலட்சுமிஉமாசங்கரிகீதாசிவகாமி – இராஜலட்சுமிகேமசரிஇரா.ஞானசேகர்இந்துமதிகவுதமிசௌ.சுரேஷ்எஸ்தர்தமிழரசிஹேமலதாகலாமாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்களும் மாணவ நண்பர்களும்குறிப்பாக சமூக அறிவியல் ஆசிரியர் இரா.குலசேகரன்முனைவர் சே.பெ.ஆனந்தன்ஜெ.லட்சுமி(நூலகர்), எழிலன்பவித்ராராஜசேகர்.
            பணியிலும் ஆய்விலும் என் சக தோழனாகிய சு.குமார்நேசத்திற்குரிய .சேகர்.
            ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்சாதி ஒழிப்பு விடுதலை முன்னணிகுடியுரிமை பாதுகாப்பு நடுவம்பெண்கள் எழுச்சி இயக்கம்நான் சார்ந்திருக்கின்ற மக்கள் கலை இலக்கிய கழகம் போன்ற சமூகவிஞ்ஞானக் களங்களிலுள்ள தோழர்கள்மேலும் SUMSஇன் சாளரம் இதழின் முன்னாள் ஆசிரியர் மனுவேல் அமல்ராஜ் அகராதிஎன்னை அன்போடு அணைத்திருக்கும் அப்பா ராமமூர்த்தி குடும்பத்தினர்செம்படுகை நன்னீரகம் (புதுச்சேரியில் இயங்குகின்ற சமூக சுற்றுச் சூழலியல் அமைப்பு).
            நான் வியந்த சிறுவன் 8ஆம் வகுப்பு ஜெ.பிரவீன்குமார்சீ.சியாமளாகௌரிமு.செல்வக்குமார்பொன்னுச்சாமிசண்முகராஜா சிறீகாந்த்செய்தியாளர் அமலோற்பவமேரிகரசூர் பத்மபாரதிகோபி உமாமகேஷ்வரிஅமுரா ராஜவேல்இரா.ஹரிகரன் (தம்பி), நண்பர் கணேஷ்பாபுமீனாம்பாள்புரம் அசார்கணிப்பொறி வீரர் சிறீதர்அயோத்திதாசர் அறக்கட்டளை அரிமாஇணையாளர்கள் ஹேமமாலினி சிவராம பாலசந்திரன்கட்டுமானக் கண்காணிப்பாளர் நாராயனன்மின்பொறியாளர் முருகவேள்டெய்லர் சு.லோகுஅன்பன் .கார்த்திக் ஆனந்திமாப்ள IASபழனிசாமி, 9ஆம் வகுப்பு பிரகாஷ் செல்லம்ஊடாட்டம் ஆய்வுக்குழுடாக்டர் அம்பேத்கர் மாணவர்விடுதி நண்பர்கள் (புதுச்சேரி)…
            நனவாலும் நினைவாலும் என்னை பிரியாது இணைந்திருக்கும் நேசத்திற்குரிய சகநண்பர்கள்தோழர்கள்குடும்பத்தினர்கள்உறவினர்கள்என் காதலுக்கு உரியவர்களும் என்னைக் காதலித்தவர்களும்.
            நான் நினைத்து மகிழ்கின்ற உங்கள் அனைவருக்கும் சகமனிதனாக சொல்லி முடிக்க விரும்புகிறேன்!
            அனைவருக்கும் எனது பேரன்பான நன்றிகள்.
    அறிவன்புடன்     
புதியவன்
Puthiyavan1986@gmail.com
https://puthiyavansiva.blogspot.com/

குறிப்பு

*நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் * (YOU MAY ALSO BECOME A SOCIAL SCIENTIST ) *
 புதியவன் * முதற்பதிப்புஆகஸ்டு 2014 * வெளியீடுமுகம், 20/37, 13-வது தெருஅய்யர் மனைப்பிரிவுசிங்காநல்லூர்கோவை -5 * தொலைபேசி: 0422-2593938 * மின்னஞ்சல்: mugambooks@gmail.com * அச்சுஜெமினி ஆப்செட் பிரிண்டர்ஸ் * பக்கங்கள்: 128 * படிகள்: 1000 * Rs.80/-* 

*எமது இந்த நூலை புதுப்பிக்கப்பட்ட வடிவில் தேவையானத் திருத்தங்களுடன் வலைதளத்தில் பதிவு செய்கிறேன். எமது இந்த முயற்சியை மே 5, 2017 உலக மாமேதை காரல்மார்க்ஸின் 200வது பிறந்ததின மகிழ்வின் நினைவாக மேற்கொள்கிறேன். சமூகவிஞ்ஞான பயிற்சியின் ஆரம்ப முயற்சியாளர்கள் இனி எளிமையாகப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் மகிழ்கிறேன்இந்நூலில் இடம் பெற்றுள்ள கவிதை கட்டுரை பகுதிகள் வலைதளத்தின் நூல் பகுதியில் இடம்பெறாதுமாறாக கவிதை இலக்கியம்வசன இலக்கியம் என்ற பிரிவில் இடம்பெறுகிறதுநூல் பகுதியில்  சமூகவிஞ்ஞானத் தத்துவ விதிகளின் அறிமுகமும் பயிற்சிக்கான வழிமுறைகளும் மட்டுமே இடம்பெறுகின்றது * மகிழ்ச்சி *  சமூகவிஞ்ஞானக் க
ங்களில் பங்கேற்போம் *  சமூகவிஞ்ஞானிகளுக்கு வலிமை சேர்ப்போம் - சமூகவிடுதலையை வென்றெடுப்போம்.*


No comments:

அதிகம் படித்தவை