எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, May 31, 2017

இயல் – 3 சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் 1

3.7.18.மழை தேவரு வழிபாடு – தளி பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் ஆனிமாத இறுதியில் வழிபாடு முடிந்த மறுநாள் இளைஞர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட மழைதேவரு உருவத்தைத் தூக்கி வருகிறார்கள்மழைதேவரை பூக்களாலும் வேப்பந்தழைகளாலும் அலங்காரம் செய்திருக்கிறார்கள்மழைதேவரின் உருவத்தை ஒருவன் தலையில் சுமந்திருக்கிறான்ஒருவன்  மணியடித்துக் கொண்டிருக்கிறான்ஒருவன் திருநீறுதட்டை ஏந்திக்கொண்டிருக்கிறான்மற்றனைவரும் “அரகரா அரகரா” என்று கடவுளைப் போற்றிக்கொண்டிருக்கிறார்கள்முன் செல்பவர்கள் பறையை அடித்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் செல்கிறார்கள்மழைதேவருக்கு அருகிலுள்ள ஒருவர் மழைவேண்டி பஞ்சப் பாடல் பாடுகிறார்அவர் பாட மற்றவர்களும் பாடுகிறார்கள். “சுண்டக்கா சூரக்கா உய்ய உய்ய மழை தேவரே / கண்டக்கா காரக்கா உய்ய உய்ய மழை தேவரே / சுண்டக்காயை தின்னு புட்டு சூத்துல அடைச்சி செத்த மக்க / காரக்காயை தின்னு புட்டு கழுத்துல அடைச்சி  செத்த மக்க / குட்டைச்சியம்மா புள்ள பெத்தா குட்டையிலே தண்ணியில்லே / காக்காச்சியம்மா புள்ள பெத்தா பானையிலே தண்ணியில்லே / ஊசிபோல மின்னிமின்னி உலகமெல்லாம் மழைபெய்ய / காசிபோல மின்னிமின்னி ககனமெல்லாம் மழைபெய்ய / சுண்டக்கா சூரக்கா உய்ய உய்ய மழை தேவரே” தெருத்தெருவாக எல்லா வீடுகளுக்கும் மழைதேவரை எடுத்துச் செல்கிறார்கள்மொந்தையிலும் செம்பிலும் ஒரு சிலர் குடத்திலும் தண்ணீர் எடுத்து மழைதேவருக்கு ஊற்றுகிறார்கள்மழைதேவரைச் சுமக்கும் இளைஞன் வலது மற்றும் இடது புறமாக சுற்றிக்கொண்டு ஊற்றப்படும் நீரை எல்லாப் பக்கமும் பரவலாக சிதறச் செய்கிறான்ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆரியம்சோளம்கம்பு ஆகிய தானியங்களைத் தானம் தருகிறார்கள்இறுதியாக ஊர் பொது இடத்தில் கூடி கிடைத்த தானியங்களையும் காணிக்கை பணத்தையும் கணக்குப் பார்க்கிறார்கள்காணிக்கைப் பணத்தில் கடைகளுக்குச் சென்று தேங்காய்பழம்வெல்லம்கற்பூரம்பூஊதுபத்திதிரிசனம் ஆகியவைகளை வாங்கிவருகிறார்கள்தானியங்களைத் தனித்தனியாக மாவாக்குகிறார்கள்மறுநாள் மழைதேவருக்குப் பூசை நடத்தத் தொடங்குகிறார்கள்மதியம் இரண்டு மணியளவில் மழைதேவரை அலங்கரித்துப் பறையிசை முழங்க ஏரிக்குப் புறப்படுகிறார்கள்மழைதேவரைப் பின்தொடர்ந்து மக்கள் வருகிறார்கள்ஏரியில் பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறதுநொச்சித் தழைகளாலும் வேப்பந் தழைகளாலும் தென்னம் ஓலையால் பின்னப்பட்டுள்ள  பாய் ஆகியவற்றாலும் பந்தல் அலங்கரிக்கப்பட்டுள்ளதுபந்தலில் வெள்ளைத் துணியைப் பாவாடையாக விரித்து மழைதேவரை அமர்த்துகிறார்கள்அருகில் கற்களை அமைத்து அடுப்பு மூட்டுகிறார்கள்.  தயாரிக்கப்பட்ட மாவுகளைக்கொண்டு கூழ் சமைக்கிறார்கள்அரிசி மாவில் வெல்லம் சேர்த்துப் பச்சைமாவு தயாரிக்கிறார்கள்கூழ்பச்சைமாவுகடலைபொரி ஆகியவற்றை மழைதேவருக்குப் படையலிட்டு வழிபடுகிறார்கள்தேங்காயுடைத்துப் பூசை செய்கிறார்கள்வயதான மூன்று விதவைப் பெண்களை அழுவதற்காக அழைக்கிறார்கள்மழையை வரச்சொல்லி அழுதுகொண்டே பாடுகிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 66-72).
3.7.19.சமயம் / தெய்வம் பற்றிய பிற செய்திகள் – கொல்லிமலை மலையாளிகள் நாச்சியார் என்ற பெண் தெய்வத்தையும்பெயர் குறிப்பிடப்படாத ஏழு சாமிகளையும் வழிபடுகிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 41).
3.8.தோற்றத் தொன்மம்
3.8.1.சோளகர்களது தொன்மக்கதை – காரையன் பிள்ளையன் என்ற சகோதரர்கள் கொத்தேசால் என்ற மலையில் இருந்தார்கள்இருவரும் தெய்வ சக்தி உடையவர்களாக அறியப்பட்டார்கள்காரையன் அண்ணனாகவும் பிள்ளையன் தம்பியாகவும் வாழ்ந்தார்கள்மாதேஸ்வரன் என்பது பிள்ளையனுக்கு மற்றொரு பெயராக அமைந்திருந்ததுசாவண்ணா என்ற அரக்கன் வனம் முழுவதையும் அதிகாரம் செய்துகொண்டிருந்தான்கடவுள்களும் தேவர்களும் அரக்கனிடம் அடிமை வேலை செய்து வந்தார்கள்இரண்டு சகோதரர்களும் அடிமைகளாக இருந்தார்கள்அரக்கன் காரையனை மலையின் தென்பக்கம் வேலை செய்ய அனுப்பி வைத்திருந்தான்இளையவன் அரக்கனின் கட்டளைகளை மதிக்காதவன்போல அலட்சியமாக நடந்துகொண்டிருந்தான்அரக்கன் கோபத்துடன் இளையவனை நோக்கி உன் பெயர் என்னடா என்று கேட்டிருக்கிறான்.  தூரத்திலிருந்தே தனது பெயரை சொல்லியிருக்கிறான்அரக்கன் காதில் மாதேஸ்வரன் என்ற பதில் மாதாரி என்பதாகக் கேட்டிருக்கின்றதுசெருப்பு தைப்பவன் என்பதாகப் புரிந்துகொண்டு தனது கால்களுக்குச் செருப்புத் தைக்குமாறு கட்டளையிடுகின்றான்சிறந்த செருப்பைச் செய்வதற்குத் தற்காலிகமாக விடுமுறை தேவைப்படுவதாக அரக்கனிடம் முறையிடுகிறான்சாவண்ணாவும் சிறந்த செருப்பு கிடைக்காவிட்டால் தலையை சீவி கொன்றுவிடுவதாகவும்கிடைத்துவிட்டால் நிரந்தரமாக விடுதலை செய்வதாகவும் கூறி அனுப்பி வைத்திருக்கிறான்கிருஷ்ணக் கடவுளின் உதவியுடன் மெழுகு செருப்பைத் தயாரித்து வழங்குகிறான்செருப்பை அணிந்து வழுக்குப் பாறையில் நடக்குமாறு அரக்கனிடம் வேண்டுகிறான்அரக்கனும் மகிழ்ச்சியில் ஒப்புக்கொள்கிறான்வழுக்குப்பாறை வெயிலில் செருப்பு உருகி அரக்கன் வழுக்கி பள்ளம் நோக்கி உருண்டு விழுகிறான்அனைவரும் அரக்கனைக் கல்லால் அடித்துக் கொன்று விடுகிறார்கள்மாதேஸ்வரனது முயற்சியைத் தேவர்களும் கடவுளர்களும் பாராட்டுகிறார்கள்மக்கள் மாதேஸ்வரனது புகழை அறிந்து வழிபடுகிறார்கள்இதனை அறிந்த காரையன் அரக்கனை அழிக்க அண்ணனாகிய தன்னிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் செயல்பட்டு புகழடைந்ததற்காகக் கோபமடைகிறான்தம்பியை அழிப்பதற்காக விரட்டுகிறான்மாதேஸ்வரன் உயிர் தப்பிப்பதற்காக கிருஷ்ணனிடம் அடைக்கலமாகிறான்கிருஷ்ணனும் எவ்வளவோ முயற்சித்தும் காரையனிடமிருந்து மாதேஸ்வரனைக் காப்பாற்ற முடியவில்லைஇறுதியாக மாதேஸ்வரன் அண்ணனிடம் சரணடைகின்றான்மக்கள் மாதேஸ்வரனை வழிபடுவதற்கு முன்பாக மூத்தவனாகிய காரையனை வழிபட வேண்டுமென மக்களுக்கு கட்டளையிடுமாறு தம்பியை பணிக்கிறான்தம்பி தன்னை வழிபடும் மக்களுக்குக் கட்டளையிட்டதும் காரையன் சமாதானமடைகின்றான்மூத்தவனாகிய காரையன் வழியில் தோன்றியவர்கள் சோளகர்கள் ஆவர்மாதேஸ்வரன் வழியில் தோன்றியவர்கள் லிங்காயத்துக்கள் ஆவர்லிங்கம் அணிகின்ற வழக்கம் சோளகர்களிடம்தான் இருந்திருக்கின்றதுஇறைச்சி உண்ண ஆசைப்பட்ட சோளகர்கள் லிங்கத்தை தற்சமயமாக கழட்டி வைத்துவிட்டு இறைச்சி சாப்பிட்டபோது லிங்கத்தை மீண்டும் எடுக்க மறந்துவிட்டார்கள்அந்த லிங்கத்தை லிங்காயத்துக்கள் எடுத்துக்கொண்டார்கள்அன்றிலிருந்து சோளகர்கள் லிங்கம் அணியாதவர்களாகவும் இறைச்சி சாப்பிடுபவர்களாகவும் வாழ்கிறார்கள்லிங்காயத்துக்கள் லிங்கம் அணிகிறார்கள்இறைச்சி சாப்பிடுவதில்லை என்பதாக தொன்மக்கதை அமைந்திருக்கின்றது. (பாலமுருகன்,.2013: 74-77).
            படகர்கள்மலையாளிகள்இருளர்கள் பற்றிய தொன்மக் கதைகள் புதினங்களில் இடம்பெறவில்லை.
3.9.இடப்பெயர் வரலாறு
3.9.1.நீலி வாய்க்கால் தோன்றி கதை – முட்டத்து வயல் என்ற கிராமத்தில் நஞ்சை வயல்களே இருந்திருக்கின்றனவிவசாயம் செய்கின்ற கவுண்டர் சாதியினருக்கு இருளர்களது மூப்பன் கோயில் பூசாரியாக இருந்தார்அறுவடைக் காலந்தோறும் மூன்றில் ஒரு பங்கு தானியத்தைத் பூசாரிக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்ததுஇந்த வழக்கத்தை ‘சொமெ முக்கெ’ என்று  குறிப்பிடுகிறார்கள்ஒரு தருணத்தில் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு வறட்சி உருவானதுநீர் நிலைகள் தண்ணீர் வராமல் வறண்டு இருந்தனவிவசாயிகள் ஒன்றிணைந்து அரசுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். “சொமேமுக்கெ எடுக்கக்கூடிய மூப்பன் யாரோ அவனே அந்தக் கரைவழிக்குத் தண்ணீர் கொண்டு வரவேண்டும்” என்பதாக அரசிடமிருந்து பதில் வந்திருந்ததுமுட்டத்துவயல் மூப்பன் எப்படி தண்ணீர் கொண்டு வருவது என்று அச்சப்பட்டார்அவரது மகள்கள் நீலிராசிஆகியோர் வடக்கு மலைப்பக்கம் சென்று நீரைக் கொண்டுவருவதாக தந்தையிடம் உறுதி சொல்லிச் செல்கிறார்கள்கருக்கு அரிவாளின் மூக்கினால் கீறிக்கொண்டு வாய்க்கால்களை உருவாக்கினார்கள்நீலி உருவாக்கிய வாய்க்காலை நீலி வாய்க்கால் என்று அழைக்கிறார்கள்ராசி உருவாக்கிய வாய்க்காலை ராசி வாய்க்கால்  என்று அழைக்கிறார்கள்விடியற்காலையில் வயல் கரையில் நீர் நிரம்பியதுவயல்கார கவுண்டர்கள் ஏரி அமைக்க முயன்றார்கள்ஏரி அமைக்க முடியவில்லைஅந்த ஏரிக்குப் பலி கொடுக்க வேண்டும் என்பதாக ஊர் முடிவெடுக்கப்பட்டதுமுட்டத்து வயல் மூப்பன் ஒரு ஊமைப் பெண்ணுக்குச் சடங்கு செய்து பலிகொடுத்து ஏரி அமைக்கின்றான்அந்த ஏரியை ஊமை மதகு என்று அழைக்கிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 31-32).
            சோளகர்கள்மலையாளிகள்படகர்கள் பற்றிய புதினங்களில் இடப்பெயர் வரலாற்றுக்குரிய தகவல்கள் இடம்பெறவில்லை.

3.10.குலம் இனம் சாதி
3.10.1.சோளகர்களின் குலம் - சோளகர்கள் ஐந்து குலத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள். 1.ஆலார் குலம், 2.பெள்ளர் குலம், 3.சூரிய குலம், 4.ஓங்களூர் குலம், 5.சௌக்கியர் குலம் ஆகியன சோளகர்களது குலங்கள் ஆகும்சோளகர்களின் அனைத்துச் சடங்குகளிலும் ஐந்து குலத்திற்கும் முக்கியத்துவம் இருக்கின்றது. (பாலமுருகன்,.2013: 32).
3.10.2.லிங்காயத்துச் சாதி – சோளகர்களைவிட உயர்ந்த சாதியாகக் கருதப்படுகிறார்கள்சோளகர்களைப் போல இவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் அல்லசோளகர்களின் தொன்மக் கதையொன்றில் சோளகர்களும் லிங்காயத்துக்களும் ஒரு சகோதர்களின் வம்சாவழியினர் என்பதாக விளக்கப்படுகின்றதுலிங்காயத்துச் சாதியினர் தமது சாதியின் அடையாளமாகக் கழுத்தில் லிங்கத்தை அணிந்திருக்கிறார்கள்லிங்காயத்துச் சாதியை லிங்காயத்துக் கவுண்டர் என்றும் குறிப்பிடுகிறார்கள்லிங்காயத்துக்கள் கழுத்தில் அணிகின்ற லிங்கம் இரும்பினால் ஆனதுமும்முக லிங்கம் என்று அழைக்கிறார்கள்அந்த லிங்கத்தின் கீழுள்ள திருகாணியைத் திருகியதும் லிங்கம் இரண்டாகப் பிளக்கின்றதுஅதனுள் சிறிதாகவும் மொளுமொளுவென்றும் ஒரு கருப்புக்கல் இருக்கின்றதுஅந்தக் கல்லை மாதேஸ்வரன் கோயிலில் நாற்பது நாள் பூசையில் வைத்து எடுத்திருக்கிறார்கள்அந்தக்கல் மும்முக லிங்கக் கலசத்தில் எப்பொழுதும் பாதுகாக்கப்படுகின்றது. (பாலமுருகன்,.2013: 79-82).
3.10.3.செருப்புத் தைக்கும் சாதி – ஜோகம்மாளின் மகள் ரதி செருப்புத் தைக்கும் சாதியைச் சேர்ந்த சேகரன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறாள். (பாலமுருகன்,.2013: 192-193).
3.10.4.மலைக்கவுண்டன் – கொல்லி மலை மலையாளிகள் தங்களை மலைக்கவுண்டன் என்று அழைத்துக்கொள்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 57).
3.10.5.குறும்பர் இனம் – காடுகளில் வசிக்கின்ற குறும்பர் இன மக்களைப் பற்றிப் படகர்களது குழந்தைகளுக்கு அவர்களது பாட்டிகள் கதைகளைச் சொல்கிறார்கள்இரவு நேரங்களில் மந்திர மாயங்கள் செய்பவர்களாக குறும்பர்கள் கருதப்படுகிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 138-147).
3.10.6.தொரியர் – தொரியர் இனத்தவரை படகர்கள் தொரிய மல்லர் என்றும்தொரியா என்றும்மல்லா என்றும் அழைக்கிறார்கள்படகர்களுக்கு  உதவி செய்பவர்களாக வாழ்கிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 19,36,38,41).
3.10.7.கோத்தர்  கோத்தர்களை முட்டுக்கோத்தர் என்றும் அழைக்கிறார்கள்படகர்களின் வாழ்க்கைச் சடங்கு அனைத்திலும் இவர்களது இசை சேவை இணைந்திருக்கிறதுகுழல்தாரைமத்தளம்தப்பட்டைபறை போன்ற இசைக்கருவிகளை இசைக்கிறார்கள்.
3.10.8.தாணிக்கண்டி இருளர்களது குலம் - தாணிக்கண்டி இருளர்கள் ஏழு குலங்களாக இருக்கிறார்கள். 1.வெள்ளீக, 2.கரட்டீக, 3.பேரகார, 4.சம்பை, 5.குறுநாக, 6. குப்பிலிக, 7.ஆறுமூக்இருளர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்தும் இந்த ஏழு குலங்களும் இணைந்துதான் நிகழ்கின்றன. (ஆட்டனத்தி. 2010: 23).
3.10.9.குலம் இனம் சாதி பற்றிய பிற செய்திகள் - மலையாளிகளது பஞ்சாயத்து நிகழ்கின்ற போது தர்மகர்த்தாவின் அருகில் கவுண்டர்காரைகாரர் ஆகிய சாதியினர் அமர்ந்து கொள்கிறார்கள்தாணிக்கண்டி இருளர்கள் கவுண்டர் சாதியினருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்தேன்கனிக்கோட்டையில் ரெட்டிகவுடாநாயுடுபறையர்சக்கிலி போன்ற பிற சாதியினருடன் இருளர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.
3.11.சடங்குகள்
3.11.1.பிறப்புச் சடங்கு – பிறந்த குழந்தை முதலில் அதன் வாயில் மலைத்தேனை இரண்டு சொட்டு விடுகிறார்கள்மலைத்தேனை சுவைத்த பிறகுதான் குழந்தை தாயிடம் சீம்பால் குடிக்கிறதுகுழந்தை பிறந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமான ஜடைசாமிக்குப் படையல் வைக்கிறார்கள்குழந்தை பிறந்த நிகழ்விற்குத் தீட்டுச் சடங்கு செய்கிறார்கள்குழந்தை பிறந்த மூன்று நாட்கள் தீட்டாகக் கருதப்படுகின்றதுநான்காம் நாளில்தான் தீட்டு நீங்கியதாகக் கருதுகிறார்கள்தீட்டைப் போக்குவதற்குக் குழந்தை பிறந்த மறுநாளன்று வீட்டை சாணத்தால் மெழுகி சுத்தம் செய்கிறார்கள்ஐந்து குலத்தவர்களையும் அழைத்துத் தீட்டு கழிக்கிறார்கள்ஐந்து குலத்தவர்களும் தாய்க்கும் குழந்தைக்கும் திருநீறு பூசி தீட்டு கழிக்கிறார்கள்.  (பாலமுருகன்,.2013: 17).
            மலையாளிகள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் பிறப்புச் சடங்கு பற்றியசெய்திகள் விவரிக்கப்படவில்லை.
3.11.2.பூப்புச் சடங்கு – சோளகர் தொட்டியில் ஒரு பெண் பூப்பெய்துவிட்டால் அவளைக் குளிக்கச் செய்து கொட்டகையில் அமரச் செய்கிறார்கள்பெண்ணுக்குச் சடங்கு செய்வதற்காகக் கானாம்புல் வேய்ந்த குடிசையை அமைக்கிறார்கள்இந்தக் குடிசை பெரும்பாலும் தாயின் சகோதரனால் அமைக்கப்படுகின்றதுநான்கு நாள்வரை அந்தக் குடிசையிலேயே தங்க வைக்கப்படுகிறாள்.  ஐந்தாம் நாளில் குளிக்கச் செய்கிறார்கள்புத்தாடை அணிய வைத்துப் பாடல்களுடன் அவளை வீட்டிற்கு அழைத்துவருகிறார்கள்பசுவின் சாணத்தில் ஒரு துளியை அவளது நாவிலிட்டு வீட்டினுள் அழைக்கப்படுகிறாள்கானாம்புல் குடிசை எரியூட்டப்படுகின்றதுபெண்ணைப் பெற்றவர்கள் தொட்டி மக்களுக்கு விருந்து படைக்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 116-117).
            தாணிக்கண்டி இருளர் சமூகத்தில் யாரேனும் பூப்பெய்துவிட்டால் வீட்டுத்திண்ணையில் குடிசை கட்டுகிறார்கள்பச்சை மூங்கில்களை வெட்டிப் படலாக்கித் தடுப்புச்சுவர் போன்று அமைக்கிறார்கள்மூங்கில் படலில் தென்னை மட்டைகளைப் பொருத்தி குடிசை அமைக்கிறார்கள்இந்தக் குடிசை ஒரு சிறிய வீடு போல அமைக்கப்படுகின்றதுஅந்தக் குடிசையில் பூப்பெய்தவளை முக்காலியில் அமர வைக்கிறார்கள்அந்தப் பெண்ணைக் குளிப்பாட்டி புத்தாடை அணிவிக்கிறார்கள்அந்தக் குடிசையில் தனியாக எட்டு நாட்கள்வரை தங்க வைக்கப்படுகிறாள்எட்டு நாட்களுக்குப் பிறகு தீட்டு நீக்கப்பட்டதாகக் கருதி வீட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள்இறுதியாகத் தீட்டுக் குடிசையை எரித்துவிடுகிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 56-57).
            மலையாளிகள்படகர்கள்தேன்கனிக்கோட்டை இருளர்களது பூப்புச் சடங்குகள் புதினங்களில்  இடம்பெறவில்லை.
3.11.3.திருமணச் சடங்கு – சோளகர்கள் பெண் கேட்டு வரலாமா என்று பெண்வீட்டாரிடம் நேரடியாகக் கேட்பதற்குப் பதிலாக விதை தானியம் கேட்டு வரலாமா என்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 49-50). பெண்ணுக்குப் பரிசப்பணம் கொடுத்து மணம் செய்கிறார்கள்பரிசப்பணம் அவரவர் வசதிக்கேற்ப முடிவுசெய்யப்படுகின்றதுமூத்த மகன் இறந்துவிட்டால் அவனது மனைவியை இரண்டாவது மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்திருமண வீட்டின் வாசலில் வெள்ளை நாகமரத்தின் ஒன்பது கவை குச்சிகளையும் ஒன்பது பச்சை மூங்கில்களையும் சேர்த்து பந்தல் அமைக்கிறார்கள்அந்தப் பந்தல் ஆளுயரத்திற்கு அமைந்திருக்கின்றதுபந்தலின் மேற்பரப்பு முழுவதிலும் நாக இலைகளை நிரப்பியிருக்கிறார்கள்மணமகன்மணமகள் ஆகிய இருவரது தலையிலும் காட்டுமல்லிகையினாலான சரத்தைக் கட்டியிருக்கிறார்கள்பீனாச்சியும் தப்பும் இசைக்க மணமகள் வீட்டை நோக்கி மாப்பிளை ஊர்வலம் தொடங்குகிறதுமணிராசன் கோயிலிலிருந்து மாப்பிளை ஊர்வலத்தைத் தொடங்குகிறதுசிறுவர்கள் இசைக்கு ஏற்றபடி ஆடுகிறார்கள்மணப்பெண்ணின் வீட்டு வாசலில் மணமகன் நிற்கிறான்மணமகனின் அருகிலிருந்த பெண் கையிலிருந்த மூங்கில் தட்டிலில் வெற்றிலைபாக்குசீப்புகண்ணாடிசீலைதாலி ஆகியவற்றை வைத்திருக்கிறாள்நாகஇலை பந்தலில் மணமகன் உட்கார வைக்கப்படுகிறான்மணமகளின் தோழி மணமகனது முகத்தில் கருப்பு மற்றும் வெள்ளை பொட்டுக்களை வைக்கிறாள். ‘கோமாதா மனம் குளிர்ந்தாள் . அடுத்தது நடக்கட்டும்’ என்று கோல்காரன் சொல்கிறான்மானா என்னும் மூங்கிலாலான உழக்கையில் குப்பையை நிரப்பி வைத்திருக்கிறார்கள்மணமகனை அந்த உழக்கையைப் பார்க்காமல் வந்து பின்னங்காலால் மூன்றுமுறை உதைக்கும்படி செய்கிறார்கள்குப்பை கீழே கொட்டியதும் திருஷ்டி கழிந்ததாகச் சொல்கிறார்கள்மணமகன் மணப்பெண்ணின் வீட்டிற்குள் சென்று அவளது சுண்டுவிரலை தன் சுண்டுவிரலுடன் இணைத்து நாகஇலை பந்தலுக்கு அழைத்து வருகிறான்கோவணத்துடன் நின்ற கோல்காரன் முன்னோர்களின் கோலை உயர்த்தி மந்திரத்தை முணுமுணுத்தப் பின்னர் மணமகன் தாலி கட்டுகிறான்மணமகளின் வீட்டில் வெல்லம் மற்றும் புளியங்கொட்டை சேர்த்துத் தயார் செய்துள்ள உணவைப் பெண்ணின் தாய்மாமன் மணமகனுக்கு ஊட்டுகிறான்மணமகன் வீட்டார் தயார் செய்துள்ள அரிசிசோறும் காரமான ஆட்டுக்கறி குழம்பும் அனைவருக்கும் பரிமாறப்படுகின்றதுதேக்குமர இலைகளைச் சிறுக் குச்சிகளால் தைத்துத் தயாரிக்கப்பட்ட இலையில் உண்டு மகிழ்கின்றனர்ஆண்கள் கஞ்சா புகையினை புகைத்து மகிழ்கிறார்கள்மணமகளின் வீட்டில் மணமக்கள் இருவரும் தனித்து விடப்படுகிறார்கள்அன்றைய இரவு உக்கடத்தீ ஏற்றி விடியும்வரை ஆட்டமும் பாடலும் இசையுமாய் கொண்டாடுகிறார்கள். (பாலமுருகன்,.2013: 53-56).
            கொல்லி மலை மலையாளிகள் வயதுப் பார்த்துத் திருமணம் செய்துகொள்வதில்லைபெண் வீட்டுக்காரர்களின் ஊரில் அனுமதி பெற்றுப் பெண் கேட்டு வருகிறார்கள்வீட்டிலிருந்து கிளம்பும்போது நல்ல சகுணம் பார்க்கிறார்கள்மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் நீர் சொம்பு கொடுத்துக் கம்பளி விரிக்கப்பட்ட திண்ணையில் அமர வைக்கிறார்கள்பெண் வீட்டில் கவுண்டன் கரைகாரன் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்வந்தவர்களுக்குப் பூசிக்கொள்ளச் சந்தனம் கொடுக்கிறார்கள்விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதும் கை கழுவ நீர் கொடுக்கிறார்கள்மாப்பிள்ளை வீட்டார் சாப்பிட்டு முடிந்ததும் வீட்டில் ஏற்றப்பட்டுள்ள விளக்கை மாப்பிள்ளை வீட்டார் வணங்குகின்றனர்கம்பளி விரிப்பில் அமர்ந்து திருமணப் பேச்சைத் தொடங்குகின்றனர்ஊர் கவுண்டர் மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்கிறார்எங்கள் வீட்டில் பெண் இருப்பதை எப்படி தெரிந்துகொண்டு வந்தீர்கள் என்ற விபரத்தை ஊர் கவுண்டன் கேட்கிறார்வந்தவர்கள் அறிந்த முறையைத் தெரியப்படுத்துகிறார்கள்பையனுக்கு எத்தனையாவது திருமணமாக பெண் கேட்கிறீர்கள் என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள்மாப்பிள்ளை வீட்டாரும் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதுண்டா என்ற செய்தியைத் தெரிந்து கொள்கிறார்கள்பெண்ணுக்கு மாப்பிள்ளை கொடுக்க வேண்டிய பரிசப்பணம் எவ்வளவு என்பதைப் பேசி முடிவெடுக்கிறார்கள்இறுதியாகத் தங்கள் வீட்டுப் பெண்ணை இன்னார் வீட்டுப் பையனுக்கு மணம் செய்து கொடுப்பதாக மண்ணைத் தொட்டு சத்தியம் செய்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 152-156). கல்யாணத்துக்காக நெல் குத்தி காரியத்தைத் தொடங்கலாம் என்று ஊர்கவுண்டர் அனுமதியளிக்கின்றார்ஊர்க் கோவிலில் அல்லது பூசாரி வீட்டில் திருமணம் நிகழ்த்தப்படுகின்றதுபெண்ணும் மாப்பிளையும் விடியற்காலையில் நல்ல நேரம் பார்த்து வந்து சேர்கின்றனர்கவுண்டர்கரைகாரர்பூசாரிஐயன்பூசாரிதண்டல் போன்றவர்கள் வந்திருந்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள்கோவில் வீட்டில் பெண்ணும் மாப்பிளையும் தனித்தனியாக தங்கியிருப்பார்கள்கரைகாரர் கண்டனுக்குச் சந்தனம் பூசிவிடுகிறார்தண்டல் எல்லோருக்கும் சந்தனம் பூசிவிடுகிறார்கரைகாரர்கள் பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் சந்தனம் பூசிவிடுகிறார்கள்மாலையிட்டு கங்கணம் கட்டிவிடுகிறார்கள்கரைகாரர் மாப்பிள்ளையைத் தூக்கிச் சுமந்து மணவறையை மூன்று முறை சுற்றியதும் மணவறையில் அமர வைக்கிறார்மணமக்களை தூக்கிச் சுற்றும்போது மற்றொரு கரைகாரர் பாயை கட்கத்தில் வைத்துக்கொண்டு தண்ணீர் செம்புடன் பின்தொடர்ந்து சுற்றுவது வழக்கமாக இருக்கின்றதுஇது பரம்பரையாக இவர்களுக்கு இருக்கின்ற உரிமையாகும்பெண் மீதான தாய்மாமன் உரிமைக்காக கவுண்டர் வழக்கம்போல வழக்குப் பேசி பெண்வீட்டாரிடமிருந்து தாய்மாமனுக்குரிய உரிமைப்பணத்தை வாங்கிக்கொடுக்கிறார்உயர்ந்த கல்மேடையில் பாய்தண்ணீர்ச்செம்புசந்தனப்பேழை ஆகியவை வைக்கப்படுகின்றனகவுண்டர்கரைகாரர் ஆகியோரது காலில் விழுந்து இருவீட்டாரும் வணங்குகிறார்கள்கரைகாரர் கவுண்டரின் காலில் விழுந்து தாயே என்று வணங்குகிறார்கவுண்டர் மகராசனாயிரு என்று வாழ்த்துகிறார்தாலிகட்டலாமா என்று கவுண்டரிடம் கரைகாரர் அனுமதி கேட்கிறார்கவுண்டர் அனுமதியளிக்கிறார்மணவறைக்குப் பெண்ணை தூக்கிவர தாய்மாமனின் அனுமதியை வேண்டுகின்றனர். “வெள்ளிக்கடை தெறந்து விட்டோட்டு பூந்தேரை!” என்று கூறி அனுமதியளிக்கிறான்கரைகாரர் பெண்ணை மணமேடைக்கு தூக்கிவருகிறார்கரைகாரர் தாலியை எடுத்து கவுண்டரிடம் கொடுக்கிறார்பெண்ணுக்கு தாலி கட்டும் உரிமை கவுண்டருக்கு உரியதாக இருக்கின்றதுபெண்ணின் பின்னே மூன்று கரைகாரர்கள் நிற்க கவுண்டர் தாலி கட்டுகின்றார்திருமணம் முடிந்ததுகவுண்டர் தனது முதல் மொய்ப் பணத்தை வழங்குகிறான்அனைவரும் அவரவர் விருப்பப்படி மொய் வழங்குகின்றனர்கவுண்டர் வீட்டுக்குக் கூடை நிறைய சோறும் தேங்காய் பழமும் வைத்துத் தண்டல் மூலம் கௌரவக் காணிக்கையாக அனுப்புகின்றனர்திருமணம் முடிந்து ஊர் திரும்புபவர்களுக்கு ஒரு குத்துச் சோறும் தேங்காய்பழமும் கொடுக்கிறார்கள்பெண் வீட்டார் தமது ஊராரின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதற்காகக் குறைந்தது ஒரு மொடா அரிசியும் நூறு ரூபாயும் கொடுக்க வேண்டும்ஊர்க்காரர்கள்தர்மகர்த்தா ஆகியோரது முன்பு காலில் விழுந்து ஒரு மொடா அரிசிசமையலுக்கான காய்கறி பொருட்கள்நூறு ரூபாயை ஏற்குமாறு வேண்டிக் கொடுக்கிறார்கள்மணமகளை மணமகன் வீட்டிற்குச் சென்று விட்டுவிட்டு ஊர் திரும்புகிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 202-210).
            படகர்கள் திருமண நிகழ்வுகளை ஆவணி மாதம் நிகழ்த்துகிறார்கள்மாப்பிளை வீட்டார் மணமகனை அழைத்துக்கொண்டு கோத்தர் இசை முழுங்க மணமகள் வீட்டிற்குச் செல்கிறார்கள்பரிசுப் பொருட்களையும் இருநூறு ரூபாய் பணத்தையும் சீராகக் கொடுத்து மணமகளை அழைத்து வருகிறார்கள்மனை வாயில் செம்மண் பூசிப் புதுப்பிக்கப்பட்டிருக்கிறதுமணப்பெண் மனைவாயிலில் வந்து நின்றதும் வயதான பெண்ணொருவள் குடத்திலிருந்து நீரெடுத்து மணப்பெண்ணின் கையில் மூன்று முறை வழங்குகிறாள். “குடத்திலிருந்து ஒழுகும் நீர் போல் வழி வழி வரும் இந்தக் குடும்ப வளர்ச்சியை ஏற்றுக் கொள்வாயாக” என்ற வாசகத்தையும் சொல்கிறாள்அந்த நீரை மணப்பெண்ணின் கைகளையும் கால்களையும் நனைக்கும்படி வழங்கியிருக்கிறாள்பொற்கம்பியில் கோக்கப்பட்ட மணிமாலை  ஒரு தட்டில் இருக்கின்றதுமுதியவள் அந்த மணிமாலையை எடுத்து மணப்பெண்ணின் கழுத்தில் போட்டு உள்ளே அழைத்து வருகிறாள்வீட்டின் புற மனையில் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கிறதுகம்பளத்தில் புது வட்டிலில் சாமைச்சோறும் புதுப்பாலும் பரிமாறுகிறார்கள்மணமகனின் தங்கை மணப்பெண்ணுக்குக் கைகழுவ நீர் வழங்குகிறாள்பெண்களும் சுமங்கலிகளும் புடைசூழ பொன்னைப் போன்ற புதுப்பானையில் அருவியிலிருந்து புது நீரெடுக்க தயாராகிறார்கள்கோத்தர் இசை முழங்க மணமகள் அருவிக்கரையில் நீரெடுத்து மனைபுகுந்ததும் கணவரின் வீட்டுக்கு உரிமையுடையவளாகிறாள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 161-162).
            இருளர்களின் திருமணச்சடங்குகள் பற்றிய விவரங்கள் புதினங்களில் செறிவாக இடம்பெறவில்லை.
3.11.4.பிரசவச் சடங்கு – கொல்லிமலை மலையாளிப் பெண் கணவனல்லாத வேறொருவனுடன் சேர்ந்து கருவுற்றிருந்தால் பிரசவ வலியின்போது குழந்தை வெளிவராமல் தாய் மிகவும் துயரப்படுவாள்அவள் யாருடன் சேர்ந்து கருவுற்றாள் என்ற உண்மையை மருத்துவச்சியிடம் சொல்லிவிட வேண்டும்மருத்துவச்சி தர்மகர்த்தாவுக்குச் செய்தி அனுப்புவார்தர்மகர்த்தா அந்தப் பெண்ணின் கருவுக்குக் காரணமானவனை அழைத்துவருகிறார்கர்ப்பிணியின் வீட்டு நடுவில் விளக்கேற்றி வைக்கப்படுகின்றதுஇதனை நல்ல விளக்கு என்கிறார்கள்தர்மகர்த்தா அறிவுறுத்தியபடி அந்த நபர் விளக்கைக் கும்பிடுகிறார். “நான் செஞ்சது தப்புச்சு தாயேபெளை பொறுத்துக்கனும்நல்ல படியா கொழந்தை பெறக்கணும்” என்று கும்பிட்டுவிட்டு விளக்குத்திரியிலுள்ள கரிப்பசையை எடுத்துக் கர்ப்பிணியின் நெற்றியில் பொட்டு வைக்கிறான்தர்மகர்த்தா அவனது கையில் ஒரு அரிவாளைக் கொடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை அறிவுறுத்துகிறார்அரிவாளைப் பெற்றுக்கொண்டவன் வாசல் படிக்கு மேலுள்ள எரவானக் கூரையிலுள்ள வரிச்சல் கம்பை மூன்று வெட்டு வெட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகின்றான்இந்தச் சடங்கு முடிந்ததும் மருத்துவச்சியின் உதவியுடன் பிரசவம் எளிதாக முடிகின்றது. (சின்னப்ப பாரதி,கு. 2008: 84-93).
            சோளகர்கள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் பிரசவச் சடங்குகள் பற்றிய செய்திகள் செறிவாக இல்லை.
3.11.5. முகூர்த்த ஏர் கட்டுதல் – மலையாளிகள் முதல் வருட அறுவடையை முடிந்து அடுத்த வருடத்திற்கான விதைப்பிற்காக நிலத்தை உழுவதற்கும் கொத்துவதற்கும் முன்பாக முகூர்த்த ஏர் கட்டுதல் என்ற சடங்கைச் செய்து முடிக்கிறார்கள்புதிய உழவுக்கும் புதிய விதைப்பிற்கும் சரியான தருணம் எதுவென்று முடிவெடுத்துக் காட்டிலோ வயலிலோ முதன்முதலாக உழவு ஏர் கட்டப்படுகின்றதுஇதனையே முகூர்த்த ஏர் என்கிறார்கள்இந்த ஏரை ஊர் பூசாரி கட்டுகிறார்பரம்பரை பரம்பரையாக ஊர் பூசாரிதான் முகூர்த்த ஏரைக் கட்டுகிறார்முகூர்த்த ஏரை கட்டுவதற்குரிய செய்தியை முதல் நாள் தண்டோரா மூலமாக ஊராருக்கு அறிவிப்பார்கள்முகூர்த்த ஏர் கட்டுகின்ற நாளன்று வீட்டில் அடுப்பு எரிக்க மாட்டார்கள்பயறு வேக வைக்க மாட்டார்கள்குளிக்கவோ துணிதுவைக்கவோ கூடாதுவேலை செய்யக் கூடாதுகாடு அழிச்சு நெருப்பு மூட்டக் கூடாதுஇந்த நடைமுறைகளைக் கடைபிடிக்காதவர்கள் சம்பிரதாயத்தை மீறிய குற்றத்திற்காகப் பஞ்சாயத்தார் முன்னிலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனையை ஏற்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 52-53).
3.11.6. பால்கறக்கும் சடங்கு – படகர்கள் வீட்டில் பால்கறக்கும் பொறுப்பை ஏற்கவிருக்கும் சிறுவனுக்குப் புனிதச் சடங்கினைச் செய்கிறார்கள்அதிகாலையிலேயே வீட்டை மெழுகிச் சுத்தம் செய்கிறார்கள்சுடுநீர் வைத்து அனைவரும் நீராடுகிறார்கள்பால் கறப்பதற்கான காரி எருமையைக் குளிப்பாட்டி மணிகள் கட்டி அலங்காரம் செய்கிறார்கள்புனிதச் சடங்கை ஏற்கவிருக்கும் சிறுவன் புதிய உள்ளாடைகளையும் மேலாடைகளையும் அணிந்திருக்கிறான்பெண்கள் மரியாதையுடன் ஒதுங்கியிருக்கிறா்கள்சிறுவனின் தந்தை காலையிலேயே பால்மனையைச் சுத்தம் செய்துவிடுகிறார்பால் கலயங்களைத் துலக்கி சுடுநீரூற்றி கழுவி வைத்திருக்கிறார்பரம்பரை பரம்பரையாகப் பயன்படுத்திவந்துள்ள மூங்கில் பாற்குழாயையும் சுத்தம் செய்து வைத்திருக்கிறார்அந்தப் பாற்குழாயை எடுத்து வந்து ஊரார் முன்பாகக் கிழக்கு முகம் பார்த்து எருமையின் மடியில் பால் கறக்கிறார்முக்கால் பங்கு நிறைந்ததும் பொறுப்பேற்கும் சிறுவனிடம் ஒப்படைக்கிறார்கள்சிறுவன் அந்த ஹொணேயை வாங்கி பாலைக் கறந்து பால்மனைக்கு எடுத்துச் செல்கிறான்வீட்டிலுள்ள அனைத்துப் பாத்திரங்களிலும் பாலைத் தெளிக்கிறான்தந்தை மீதும் தாயார் மீதும் பெரியவர்கள் மீதும் பாலைத் தெளிக்கிறான். “வற்றாத பால் வழங்க வளம் பெறுவாய்;  எருமைகளும் பசுவினங்களும் செழிக்கட்டும்” என்று ஒவ்வொருவரும் ஆசிர்வதிக்கின்றனர். (ராஜம் கிருஷ்ணன். 2001: 62-67).
3.11.7. இறப்புச் சடங்கு – கொல்லி மலை மலையாளிகளில் யாரேனும் இறந்தால் உடனே சாவு மேளத்துடன் செய்தி அனுப்புகிறார்கள்சாவு மேளமும் வான வெடியும் வயலுக்கோ சோலைகளுக்கோ சென்றவர்களை வரவழைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றனஉள்ளூர்காரர்கள் யாரும் வேலைக்குச் செல்ல மாட்டார்கள்வெளியூரிலிருந்து உறவினர்கள் அவர்களது ஊராருடன் வந்துவிடுகிறார்கள்உறவினரும் உறவினரது ஊராரும் துண்டு வேட்டி போன்ற பொருட்களைக் கொடுக்கின்றனர்உறவினர்கள் கொடுக்கின்ற பொருட்களைக் கோணி என்கிறார்கள்கோணியைப் பிணத்தோடு சேர்த்துப் புதைத்துவிடுகிறார்கள்சாவு நிகழ்ந்து குறைந்தது மூன்று நாட்களாவது இடைவெளிவிட்டுக் கருமாதி செய்கிறார்கள்சாமிக்குக் காப்பு கட்டுவதாக இருந்தாலோ மாதத்தின் கடைசி நாளாக இருந்தாலோ கருமாதியை அன்றே வைத்துவிடுகிறார்கள்.  சாவு நிகழ்ந்த அன்றே கருமாதியெனில் ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு ரூபாயும் ஒரு படி அரிசியும் கொண்டுவந்து சாவு வீட்டாருக்குக் கொடுத்து உதவுகின்றனர்அந்த அரிசியில் கருமாதியை முடிப்பதற்காகப் பொங்கலிடுதலும் வந்திருப்பவர்களுக்குத் தேவையான உணவு தயாரித்தலும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. ‘சாமி கும்பிட வாங்க’ என்று அழைப்பு வருகின்றதுஇறந்தவனின் பழைய துணிகளை மடித்து வைத்து அதன் முன்னால் பொங்கல் படையலிட்டுச் சூடம் ஊதுபத்தி ஏற்றி வழிபடுகிறார்கள்படையலிட்ட பொங்கலை இறந்தவனைக் குளிப்பாட்டிய இடத்தில் போட்டு கை கழுவுகிறார்கள். ‘தலைக்குச் சீலை கொடுக்குறவங்க வாங்க’ என்று அழைக்கப்பட்டதும் இறந்தவனின் மகன் மொட்டையடிப்பதற்காக மனைவியின் சகோதரர்கள் அவனது தலைக்கு முடிச்சிட்ட பணத்துடன் சீலையைக் கட்டிவிடுகிறார்கள்சம்பிரதாய ஆறுதல் மொழியாக ஒரு பாடல் வழக்கம்போலப் பாடப்படுகின்றது. “நச்சுத் தலைவலி / நையாண்டிக் காய்ச்சல் / கோம்பை குதிச்சோம் / கோடங்கி பார்த்தோர் / கோடங்கி பார்த்த புள்ளே / கொறையெழுத்தா நின்னுபோச்சு / பள்ளம் குதிச்சோம் / பஞ்சாங்கம் பார்த்தோம் / பஞ்சாங்கம் பார்த்தபுள்ளெ / பாதியெழுத்தா நின்னு போச்சு / ஆணாப் பொறந்தார்க்கு / சந்தை தொணை / வேட்டை தொணை / கூட்டம் தொணை / பொண்ணாப் பொறந்தார்க்கு / நெக்கிரி தொணை / தண்ணி தொணை / வெறகு தொணை / ஆத்தக் கூட்டி ஊத்தெறச்சு / ஆயிரம் செந்நெல் வெளைவிக்க / அதுலெ ஒண்ணு சாவியாச்சு” இந்த வரிகளை ஒரு பெரியவர் முன் அடி எடுத்துப் பாட மற்றவரும் தொடர்ந்து பாடுகிறார்கள்இறுதியில் அனைவரும் பசியாற உண்டு கருமாதியை முடிக்கின்றனர். (சின்னப்ப பாரதி,கு. 2008: 261-264).
            படகர்களது ஹட்டியில் யாரேனும் இறந்துவிட்டால் உடனே தொரிய மல்லரை அழைக்கிறார்கள்இறந்த செய்தியை எங்கெல்லாம் சென்று யாரிடமெல்லாம் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பிவைக்கப்படுகிறார்கள்இசை சேவையை வழங்குவதற்காக கோத்தர்கள் அழைக்கப்படுகிறார்கள்செவ்வாய் கிழமையன்று இறந்தவரை தகனம் செய்ய மாட்டார்கள்கழிகளும் கம்புகளும் குச்சிகளும் சேகரித்து இறந்தவரின் இறுதி ஊர்வலத்திற்காக ஏழடுக்கில் சப்பரம் தயாரிக்கிறார்கள்சப்பரத்திற்குத் தேவையான துணிகள் பட்டுகள் அனைத்தும் வாங்கி வருகிறார்கள்இறந்தவரை அவரது மகள் குளிப்பாட்டுகிறாள்.  புதிய ஆடைகளை உடுத்தி நெற்றியில் இரண்டு வெள்ளி நாணயங்களை ஒட்டி சப்பரத்தில் படுக்க வைக்கிறார்கள்வானுலக யாத்திரைக்குத் தேவையான உணவாக வெல்லம்தினைமாவுசாமைஅரிசிகடலைபொரிபணியாரம் ஆகியவற்றைக் கூடைகளில் வைக்கிறார்கள்மக்களனைவரும் அவரது கால்களைத் தொட்டு வணங்குகிறார்கள்இறுதி காணிக்கைகளாக மஞ்சள் சிவப்பு கோடுகளிட்ட துணிகளைப் போர்வைக்குள் வைக்கின்றார்கள்இறுதி ஊர்வலம் நிகழ்கிறதுஇறந்தவரை மயானத்தில் எரியூட்டுவதற்கு முன்பாக பாவமன்னிப்பு பாடலொன்றைப் பாடுகிறார்கள்இறந்தவர் உயிர்வாழ்ந்தபோது செய்த பாவங்கள் அனைத்திற்கும் மன்னிப்பு வேண்டுகின்ற பாடலாகும். “முன்னோர் செய்த பாவம் / மூத்தோர் செய்த பாவம் / தான் செய்த பாவம் / தமியர் செய்த பாவம் / எல்லாம் விலகட்டும்! / எல்லைக் கற்கள் விலக்கிய பாவம் / எண்ணற்ற பொய்களின் பாவம் / ஏழையின் துயர் தீர்க்காத பாவம் / எளியோரை வாட்டிய பாவம் / பிறர் பூமி செழிக்கப் பொறுக்காத பாவம் / பிறர் மாடு கறந்திட பொறுக்காத பாவம் / அயல் வாழ்வு சிறந்திடத் தாளாத பாவம் / அசூயைக் கிடந்தந்த ஆகாத பாவம் / பச்சை மரங்களை வெட்டிய பாவம் / பசுவைப் பாம்பைக் கொன்ற பாவம் / கோள்மூட்டி பகை செய்த பாவம் / குளிரில் விரைத்தோரை விரட்டிய பாவம் / தண்ணீரைப் பிழைத்திட்ட பாவம் / தாயாருக்கிழைத்திட்ட பாவம் / உண்ணீரைக் கலக்கிட்ட பாவம் / ஊருக்குப் பிழை செய்த பாவம்”. இவ்வாறாக முந்நூறுக்கும் மேற்பட்ட பாவங்களைச் சொல்லி இறந்தவரின் ஆன்மாவைத் தூய்மையடைய வேண்டுகிறார்கள்வேண்டுபவர்கள் அனைவரும் தங்களது குற்றங்களையும் நினைத்துப்பார்த்து தூய்மையடைய முயல்கிறார்கள்இறந்தவரின் மகன் நெருப்பு வைக்கிறார். (ராஜம் கிருஷ்ணன். 2001: 400-405).
            தாணிக்கண்டியிலுள்ள இருளர்கள் யாரேனும் இறந்தால் வண்டாரி என்னும் சேவையாளரை அழைத்து இறப்புச் செய்தியை ஊரார் உறவினர் அனைவருக்கும் தெரியப்படுத்தச் சொல்லி அனுப்புகிறார்கள்பொரைகொகால்பீக்கிஜால்ரா ஆகிய இசைக் கலைஞர்களின் இசைச் சத்தம் முழங்கிக்கொண்டு இருக்கின்றனமரண செய்தி கேட்பதற்காக வருகை தருகின்ற குலத்து மனிதர்கள் காய்ந்த குச்சி அல்லது பிரம்புடன் வருகிறார்கள்இறப்பு வீட்டார் வண்டாரியின் மூலமாக அந்தக் குச்சிகளைச் சேகரித்து வைக்கிறார்கள்சப்பரம் கட்டப்படுகின்றதுஒரு அடி உயரத்தில் நான்கு குச்சிகளை நடுகிறார்கள்அந்தக் குச்சிகளுக்கு மேலாக பாடை அமைக்கப்பட்டிருக்கின்றதுபிறை சந்திர வடிவில் பாடையைத் தயார் செய்கிறார்கள்ஏழு பெண்கள் கூடி இறந்தவனின் மனைவிக்குச் சடங்கு செய்கிறார்கள்இருளப் பெண்களின் தாலி கருப்பு பாசியால் கோர்க்கப்பட்ட கயிறாகும்இறந்தவனது மனைவியின் கழுத்திலிருந்த கருப்பு பாசிக் கயிறை அறுத்து இறந்தவனது கால் பெரு விரலில் கட்டுகிறார்கள்அவளது தலைமுடிகளில் இரண்டொன்றை பிடுங்கி இறந்தவனது கால் பெருவிரலில் கட்டுகிறார்கள்நீலி வாய்க்காலிலிருந்து எடுத்தவந்து தண்ணீரை குறுநாககுப்பிலிகஆறுமூக் ஆகிய குலத்தவர்கள் இறந்தவரின் உடல் மீது தெளிக்கிறார்கள்இறந்தவரின் வீட்டிற்குள் சென்று நீர்கோமியம் ஆகிய இரண்டையும் தெளிக்கிறார்கள்இறந்தவனை இறுதி ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்கிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 22-30).       
            சோளகர் பற்றிய புதினத்தில் இறப்பு கருமாதி செய்திகள் செறிவாக அமையவில்லை.
3.12.சுகாதாரம்
            சோளகர்கள்படகர்கள்தாணிக்கண்டி இருளர்கள் ஆகியோரது வாழ்க்கைச் சூழல்கள் சுகாதாரப் பிரச்சனைகளற்ற ஆரோக்கியமான நிலைமையைக் கொண்டிருக்கின்றனகொல்லி மலை மலையாளிகளிகள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் ஆகியோரது வாழ்க்கைச் சூழலில் சுகாதாரப் பிரச்சனைகள் இருக்கின்றன.
            கொல்லிமலை மலையாளிகள் வாரம் ஒரு முறைதான் குளித்து உடம்பை சுத்தம் செய்கிறார்கள்ஞாயிறு விடுமுறையன்று மட்டும்தான் ஓடைக்குச் சென்று சுடுநீர் வைத்துக் குளிக்கவும்நிதானமாகத் துணி துவைக்கவும் வாய்ப்புடையவர்களாக இருக்கிறார்கள்வாரம் ஒரு முறை குளிப்பதனால் அழுக்கான உடலில் பேன்கள் ஊறுவது இயல்பாக இருக்கின்றதுதலைக்குத் தேய்த்துக் குளிப்பதற்காக ஆட்டுப்பால்ஆட்டுத்தயிர் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
            தேன்கனிக்கோட்டை இருளர்கள் தலைக்கு களிமண்ணைத் தேய்த்துக் குளிக்கின்றார்கள்தேன்கனிக்கோட்டையிலுள்ள ஏரியில் குளித்தல்துவைத்தல்கால்கழுவுதல்,  மாடுகளைக் குளிப்பாட்டுதல் அனைத்தும் நிகழ்த்தப்படுகின்றனஇந்த நீரையே குடிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
3.13.பாலின அதிகாரம்
கெம்பம்மாள் இறந்து போன தனது கணவனின் தம்பியை மறுதிருமணம் செய்ய விரும்புகிறாள்இதனை அறிந்த சிக்குமாதாவின் தந்தை இளைய மகனிடம் கெம்பம்மாளின் மீது வெறுப்புணர்வை உருவாக்க முயல்கிறான்உன் அண்ணி குடிசைக்குப் போகாதேஅவளை திருமணம் செய்து கொண்டதால்தான் உன் அண்ணன் இறந்துபோனான் என்பதாக அவதூறாக பேசுகிறான். (பாலமுருகன்,.2013: 50)
வீரபத்திரன் மல்லி இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு இழுத்துச் செல்கிறார்கள்மல்லி காவல்துறையினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறாள்மேலும்வேற்று சாதிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறாள்விடுதலையடைந்து இருவரும் வீடு திரும்பியபோது கணவனும் வீட்டாரும் ஊராரும் இவளைச் சாதி கெட்டுபோனவளாகச் சொல்லி ஒதுக்கிவைக்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 151)
3.13.1.வீட்டுக்கு தூரம் வைத்தல் – பெண்களை அவர்களது மாதவிடாய் காலங்களில் தீட்டானவர்களாகக் கருதுகிறார்கள்ஆகவே அவர்களது மாதவிடாய் நாட்களில் வீட்டுக்குத் தூரமாகத் தள்ளி வைத்துவிடுகிறார்கள்ஊரிலுள்ள பொது குடிசையில் அந்தப் பெண்கள் தனியாகத் தங்கவைக்கப்படுகிறார்கள்அவர்கள் சுத்தமாகும்வரை வீட்டிற்குள் நுழையக் கூடாதுவீட்டிலுள்ளவர்கள் உணவைத் தயார் செய்துவந்து கொடுத்துச் செல்ல வேண்டும்வீட்டிற்குத் தூரமான பெண் பொது குடிசையில் தங்காமல் வீட்டிலேயே தங்கியதாகத் தெரியவந்தால் பஞ்சாயத்தார் முன்பு குற்றம் சுமத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவாள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 54).
3.13.2.பால்மனை உரிமை மறுப்பு - மரகதமலை ஹட்டியில் படகர்கள் பால் கறந்து பால் மனைக்குச் செல்லுதல் என்பதைப் புனிதமாகக் கருதுகிறார்கள்ஹொணே என்ற அந்த மூங்கில் பாத்திரத்தில் ஆண்கள் பால் கறக்கிறார்கள்அந்தத் தருணங்களில் பெண்கள் மறைவாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் எனக் கருதுகிறார்கள்பெண்களின் பேச்சுக் குரல்கூட கேட்கக் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறார்கள்பால்மனை என்ற அறைக்குள் நுழைவதற்கான உரிமை பெண்களுக்கு கிடையாதுபேதைப் பருவம் தாண்டிய பெண்கள் பாலைக் குடிக்கக்கூடாது என்பதாகக் கற்பிக்கப்படுகிறார்கள். (ராஜம்கிருஷ்ணன்.2001: 33).
            தமிழகப் பழங்குடிகளின் வாழ்வில் தந்தைவழி அதிகாரச் சமூகம் நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் பாலின அதிகாரம் என்பது ஆணாதிக்க நலன் சார்ந்து பெண்கள் மீது சுமத்தப்படுகின்ற ஒடுக்குமுறையாகவே இருக்கின்றது.
3.14.நம்பிக்கை
3.14.1.தெய்வம் பற்றிய நம்பிக்கை
3.14.1.1.மணிராசன் – தொட்டியினர் தங்களது வாழ்வை அநீதியாக வாழ்ந்தால் மணிராசன் கோபத்திற்கு ஆளாவோம் என்பதாக நம்புகிறார்கள்மணிராசன் மக்களைக் காப்பதற்காகத் தினமும் இரவில் வலம் வருகிறார் என்பதாகவும் தீய ஆவிகளிடமிருந்து தொட்டி மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதாகவும் நம்புகிறார்கள். (பாலமுருகன்,.2013: 23).
3.14.1.2.ஜடைசாமி – ஜடைசாமி தனது காட்டில் மனிதர்கள் வேட்டையாடுதலுக்கான எல்லையை வகுத்திருக்கிறான் என்று நம்புகிறார்கள்சோளகர்களுக்கு வேட்டைப்பொருள் அல்லாத உயிரினத்தை வேட்டையாடினால் ஜடைசாமியின் கோபத்திற்கு ஆளாக நேரும் என்று நம்புகிறார்கள். (பாலமுருகன்,.2013: 27).
3.14.1.3.பிள்ளையார் - சாணி வெட்டு விழாவில் பிள்ளையார் உருவத்திற்கு சாணியைப் பூசிவிட்டால் சாணியிலிருந்து தன்னை சுத்தம் செய்துகொள்வதற்காகப் பிள்ளையார் மழையைப் பொழியச்செய்வார் என்பதாக மலையாளிகள் நம்புகிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 107).
3.14.1.4.தேவர் காடு - நாற்றாப்பாளையம் வனத்திலுள்ள தேவர் காடு என்ற பகுதியில் இறைவன் உறைந்திருப்பதாக நம்புகிறார்கள்தேவர் காட்டில் வன விலங்குகளை வேட்டையாடினால்கூட  உயிரினங்களின் உடலைக் கருவிகளும் குண்டுகளும் துளைக்காது என்ற நம்புகிறார்கள்இந்த வனத்தில் வேட்டையாடுதலோ மரம் செடிகளுக்கு தீங்கு செய்தலோ கூடாது என்று கருதுகிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 126).
3.14.2.ஆவி பற்றிய நம்பிக்கை
3.14.2.1.முன்னோர்களின் ஆவி – இறந்தவர்களது எலும்புகளுள்ள கெப்பை குழியில் சோளகர்களின் முன்னோர்களது ஆவிகள் உறைந்திருக்கின்றன என்று  நம்புகிறார்கள்முன்னோர்களது ஆவி தங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.
3.14.2.2.துர்ஆவி – கெட்ட மனிதர்கள் அகால மரணமடைந்தால் அவர்கள் ஆவியாக அலைகிறார்கள் என்பதாக நம்புகிறார்கள்அத்தகைய கெட்ட மனிதர்களின் ஆவியை துர்ஆவி என்கிறார்கள்துர்ஆவிகளிடமிருந்து தொட்டி மக்கள் மணிராசன் கடவுளால் காப்பாற்றப்படுவதாக சோளகர்கள் நம்புகிறார்கள்.
3.14.3.விலங்கு பற்றிய நம்பிக்கை
3.14.3.1.யானை - யானைகளைத் தெய்வத் தன்மையுள்ள உயிரினமாக சோளகர்கள் நம்புகிறார்கள்யானைகள் சத்தியவாக்கிற்குக் கட்டுப்படுகின்ற உயிரினமாதலால் அநீதியாக நடந்துகொள்ளாது என நம்புகிறார்கள்தாணிக்கண்டி இருளர்கள் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தீட்டுக் கழிக்காமல் இரண்டு மூன்று நாட்களில் வீட்டிற்கு வந்துவிட்டால் யானை ஊருக்குள் புகுந்துவிடும் என்று நம்புகிறார்கள்.
3.14.3.2.பாம்பு - தாணிக்கண்டி இருளர்கள் பாம்பைப் பார்த்துவிட்டுச் சென்றால் நினைத்த காரியம் நடக்காது என்பதாக நம்புகிறார்கள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் பாம்பை அடித்துவிட்டு தலையை நசுக்காவிட்டால் கொன்றவர்களைத் தேடிப்பார்த்து பழிவாங்கும் என்பதாக நம்புகிறார்கள்அடித்தப் பாம்பைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டால் மழைவராது என்று நம்புகிறார்கள்.
3.14.4.பறவை பற்றிய நம்பிக்கை
3.14.4.1.காகம் -கால நேரத்திலே ஒத்தக் காக்கா கூரையிலே உக்காந்து கத்துச்சுனா ஒன்னு யாராவது ஒறம்பரை வரணும்இல்லாட்டி சாவுச்சேதி வரனும்” (சின்னப்பபரதி,கு.2008: 259.) காகம் சப்தமிடுவதைப் பற்றி இவ்வாறாக நம்புகிறார்கள்.
3.14.4.2.ஆள்காட்டிக்குருவி - தேன்கனிக்கோட்டை இருளர்கள் பயணத்தின்போது ஆள்காட்டிக்குருவியை சாஸ்திரக் குருவி என்று அழைக்கிறார்கள்சாஸ்திரக்குருவி சப்தமிட்டால் இரண்டுமுறை சப்தமிடுகிறதா என்பதைக் கவனிக்கிறார்கள்ஒரு முறை சப்தமிட்டால் கெட்டது நிகழும் என்று நம்புகிறார்கள்இரண்டு முறை சப்தமிட்டால் நல்லது நிகழும் என்று நம்புகிறார்கள்.
... 

No comments:

அதிகம் படித்தவை