எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, June 27, 2016

ஊடாட்டம் ஆய்வுக்குழு அறிக்கை-3



ஊடாட்டம் ஆய்வுக்குழு அறிக்கை-3
சித்திரை 27, 28 – மே 10, 11 (சனி, ஞாயிறு) 2014. முகம் பதிப்பக அலுவலகம், கோவை.

கலந்துகொண்டவர்கள்:
      1.தனபால், 2.நந்தகோபால், 3.காமராசர், 4.பிரசன்னா, 5.க.ஜான் ரொசாரியோ ஸ்டீபன் (நிதி பொறுப்பாளர்), 6.கமலக்கண்ணன், 7.கே. சிவக்குமார் (ஒருங்கிணைப்பாளர்) 8.ந.இரவீந்திரன் (சிறப்பு பங்கேற்பாளர்). மூன்று உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை: (சு.குமார், பொன்னுச்சாமி, மரியரீகன்)

நிகழ்ந்த நிகழ்வுகள்:
      1. பங்கேற்பாளர்களின் அறிமுகம்
2. பழந்தமிழ் நூல்களின் புதுமுறைப் பதிப்புகள் – க.ஜான் ரொசாரியோ ஸ்டீபன் (கட்டுரை வாசிப்பு)
3. தமிழ் பேசும் மக்களிடையில் சாதி ஒழிப்பும், தேசியமும், இன ஒடுக்கலும் – ந.இரவீந்திரன். (உரை)
4.போருக்குப் பிந்தைய இலங்கையின் எதிர்காலம்: ந.இரவீந்திரனுடன் முறைசாரா உரையாடல்.
5.பேன்றி (மகாராஷ்டிர தலித் பற்றிய திரைப்படம். திரையிடலும் கலந்துரையாடலும்.)
6.கோபாட் காந்தி (தமிழில் சா. மரியரீகன்). உணர்நிலையும் ஜனநாயகமும். (கலந்துரையாடல்)
7. ஊடாட்டத்தைப் புதுப்பித்தல்
7.1 ஆய்வாளர்கள் விருப்பக் களத்தில் நிகழ்ந்த வேலை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
குறிப்பு-
*அடுத்தச் சந்திப்பில் விருப்பமான ஆய்வுக்களத்தை உறுதி செய்ய வேண்டும் - ஜான் ரொசாரியோ ஸ்டீபன்
*திருமணம், காதல் என்ற விருப்பமான ஆய்வுக்களத்தை மாற்றிக்கொண்டார். ‘தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல்  நோக்கு’ என்ற முனைவர் பட்ட ஆய்வே விருப்ப ஆய்வுக்களமாக அமைகிறது –கே. சிவக்குமார்.
7.2 தன்னையும் ஊடாட்டத்தையும் சரிசெய்யும்  முயற்சியாக உறுப்பினர்களின் மனம் திறந்த உரையாடல்கள் நிகழ்ந்தன.
(நிகழ்வுகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. செயலர்-தனபால்)

எடுத்த முடிவுகளும் பொறுப்புகளும்:
1.   நிதி பொறுப்பாளர்  –க.ஜான் ரொசாரியோ ஸ்டீபன்
2.   சூன் இறுதிக்குள் நீண்டகால /குறுகியகால  நோக்கம் பற்றிய அறிக்கையின் முன் வடிவம் சுற்றுக்கு அனுப்பப்படும் -காமராசர்
3.   உறுப்பினர்களின் கடமை, பொறுப்பு, காலம் பற்றிய வரையரையின் முன் வடிவம் சுற்றுக்கு அனுப்பப்படும்- சென்னை தோழர்கள்.
4.   ஊடாட்டம் இதழை மரியரீகனிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் -உறுப்பினர்கள்
5.   ஊடாட்டம் வலைப்பூ ஒரு வாரத்திற்குள் மின்னஞ்சல் அனுப்பப்படும் -காமராசர்
6.   அடுத்தச் சந்திப்பு ஆகஸ்ட் 15க்குள் நிகழ வேண்டும்  –கே.சிவக்குமார்


நாள்:14.5.2014
இடம்-புதுச்சேரி

அறிவன்புடன்
கே.சிவக்குமார் (ஒருங்கிணைப்பாளர்)


“என் பணி கடவுள், மதம் இல்லாச் சமுதாயம் உருவாக்குவதல்ல! மானமும் அறிவும் உள்ள சமுதாயம் உருவாக்குவதே!!” _தந்தை பெரியார்













No comments:

அதிகம் படித்தவை