எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, August 8, 2016

வீட்டுக்குள்ளே நாட்டுக்குள்ளே



டப்பிங் பாடல்-3


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி பட பாடல் காட்டுக்குயிலே மனசுக்குள்ளே என்ற பாடல் சமூக அக்கறையுடை பாடலாக டப்பிங் செய்யப்பட்டுள்ளது. – அறிவன்புடன் புதியவன்

1       வீட்டுக்குள்ளே நாட்டுக்குள்ளே
          மக்கள் வாழும் அடிமை வாழ்ககை மாயத்தான்
2       அன்பு தொட்டு வீரம் தொட்டு
          உண்மை அறிவின் உச்சம் பெற்று வாழத்தான்
            
T       மனிதர் வந்த பாதை என்ன?
          தோல்வி கண்டு சோகம் என்ன?
          நம்மை வீழ்த்தும் துரோகம் என்ன?
           நாளை வெல்லும் பாதை என்ன?   (வீட்டு..)

1       அறிவு தேடி வாழ்ந்தாலென்ன
          அன்பு வேண்டி மாய்ந்தாலென்ன
           வாக்கு கேட்டவன் பாடை செய்வான் மாற்றம் ஏதடா டோய்
2       போதை எல்லாம் விட்டுத்தள்ளு
          பழமை எல்லாம் பாடம் பெற்று
          புதுமை உலகம் படைப்போமென்று சபதம் கொள்ளடா டோய்

1       கொடுமை வாழ்க்கை வீச
          தனிமை வாழ்க்கை கூச
          அறிவு பொங்கி வீரம் சேர்த்து வெல்லலாம்
2       பொய் வழக்கில் நம்மை
          ஒடுக்கும் கெட்ட தொல்லை
          துணிவு பெற்று வெல்ல என்ன செய்யலாம்?

½      அச்சம் எல்லாம் விட்டுத்தள்ளு
          பேதம் எல்லாம் முட்டித்தள்ளு
          மக்களாக வென்றிடுவோம் நாம் தான்!              (வீட்டு..)

1       படிப்பு என்ன வேலை என்ன
          லாபம் என்ன நட்டம் என்ன
          பிழைப்புக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நாமல்ல
2       பாசம் வைக்க பாடம் கற்க
          மக்கள் உண்டு வாழ வைக்க
          அவரைப்போல உறவுக்காரர் யாரும் இங்கில்ல

1       உண்மை வெல்ல நாமே
          உசுரக்கூடத் தானே
2       நம் மக்கள் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவோம்

1       நம் மக்கள் போட்ட சோறு
          நிதமும் தின்னோம் பாரு
2       நாட்டைக் கூட தாயைப் போல எண்ணுவோம்

½      சோர்வு விட்டு மடமை விட்டு
          சொர்க்கம் ஒன்று மண்ணில் கட்டு

          நல்லுலகம் மலரச் செய்வோம் நாம்தான்! (வீட்டு..)

No comments:

அதிகம் படித்தவை