எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, June 25, 2016

கொம்பில்லாதகாளைகள்




கொம்பில்லாதகாளைகள்
புதியவன்
என் எதிரில் நீ
உன் எதிரில் நான்

என்நிலை உனக்கு
உன்நிலை எனக்கு

என் சூழலில் நீ
உன் சூழலில் நான்
நம் சூழலில்
எத்தனையோ
நீ நான் நம்மைப்போன்றே...

இருவர் மூக்கனாங்கயிறும்
இன்னொருவன் கையில்

அழகான கண்ணாடிப் பாத்திரத்தில் பூட்டப்பட்டுள்ளது
நம் உரிமைகளும், உணர்வுகளும் சிந்தனையும் சாவியும்

இன்னும் எத்தனைக்காலம்
என் மீதும்
உன் மீதும்
 நம் கோபங்களும், வெறியும்
மாறிமாறி மோதுவது, வெட்டுவது, குத்துவது?

பனித்துகள்களாய் இருக்கும்வரை
நம் பாதைகளும், பயணங்களும்
நமக்கானது அல்ல

இனியாவது!
'இருவர்'களும் சந்திப்போம்
தெருமுனையில்

எதிரிகளாய் அல்ல
எதிர்ப்பவர்களாய்...

No comments:

அதிகம் படித்தவை