எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, August 18, 2017

வாசிப்பின் அவசியம்

வாசிப்பின் அவசியம்
புதியவன்
சமூகவிஞ்ஞானிகளுக்கு வலிமைசேர்ப்போம்! 
புதிய மாணவர்களுக்கு வணக்கம். நமது முயற்சிகள் அனைத்தும் சமூகவிஞ்ஞானப் பயிற்சிகளே. நமது பயிற்சிகளில் புத்தக வாசிப்பு இன்றியமையாததாகும். 
 சமூக அறிவில் அக்கறையுடைய சிலர் புத்தகம் வாசிப்பவர்களாகஇருக்கிறார்கள்.  குறிப்பாக சமூகவிஞ்ஞான கடமைகளில்பொறுப்புள்ளவர்கள் பள்ளி கல்லூரிகளில் படித்த அனுபவம்இல்லாவிட்டாலும் புத்தகம் வாசிப்பதில் முன்மாதிரிகளாகதிகழ்கிறார்கள். ஆனால், படித்து பட்டம் பெற்றவர்களோ பெரும்பாலும்புத்தகம் வாசிப்பது இல்லை.  பல பேராசிரியர்களும் இதில்அடங்குவர். பலர் பெருமைக்காக புத்தகங்களை வாங்கி கண்காட்சிஅலமாரிகளில் சேமித்து வருகிறார்கள்பல வாசிப்பாளர்களோ சமூகஅறிஞர்களாக வளராமல் புத்தக புழுக்களாகவே தேங்கிவிடுகிறார்கள்.
 வாசிப்பின் இத்தகைய சூழ்நிலையில் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக நாம் புத்தக வாசிப்பில் ஈடுபடுவது மிகமிக அவசியமாகிறது. சமூகத் தேவையின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தனது புத்தக வாசிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். 
சமூக உணர்வையும் சமூக அறிவையும் வளர்த்துக்கொள்ள வாசிப்புஇன்றியமையாததாகத் திகழ்கிறது.  நாளொன்றுக்கு 30 நிமிடமாவதுபுத்தகம் வாசித்து உரையாட நேரம் ஒதுக்க வேண்டும்.  இந்த முயற்சியைமுறைப்படுத்த நம்மில் வாசிப்பு முகாம்களை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
பெரும்பாலான மக்கள் பிம்பங்களை மட்டுமே பிரதிபலிப்பவர்களாகவாழ்ந்து வருகிறார்கள்சுயசிந்தனையை இழந்த சுயமரியாதையற்றவாழ்வை மேற்கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு மாற்றாக நாம் முன்மாதிரியான வாழ்வியலை வாழ்ந்து காட்டுவது அவசியம். சுயசிந்தனையுடைய சமூகஅறிஞராக வாழ்ந்து காட்டும் கடமை நமக்கு  இருக்கின்றது.  இதற்கு புத்தக வாசிப்பு மிகவும்அடிப்படையாகும்ஏனெனில் வாசிப்பு மட்டுமே பிம்பங்களைக் கடந்துமொழிப் பதிவுகளின் வழியாக எண்ணங்களையும் கற்பனைகளையும்ஆற்றலுடன் மலரச் செய்து கருத்துருவாக்கங்களை வலிமைபடுத்துகின்றன.
கருத்தாக்கத்தின் விளைவாக சிந்தனை தூண்டப்படுகின்றதுஇந்தத்தூண்டல் உரையாடலையும் செயல்களையும் மலரச் செய்து மேலும்சகமனித ஆற்றலை வலிமைப்படுத்துகிறதுசகமனித ஆற்றலுடைய சமூகஅறிஞராக வளர்ந்து விட வேண்டும்.  
இந்த நிலையை எட்டிவிட்டால் எல்லா பிம்பங்களையும்காட்சிகளையும் உலக நிகழ்வுகள் அனைத்தையும் கருத்தாக்கங்களாககிரகித்துக்கொண்டு நமது செயலாற்றலை துல்லியமாகவும் கூர்மையாகவும்ஆழமாகவும் வேகமாகவும் விரிவுபடுத்த முடியும். இந்த விரிவுபடுத்தல்கள் நமது சமூகவிஞ்ஞான இலட்சியங்களை விரைவுடுத்தும். 
புதிய மாணவர்களாகிய நாம் வாசிப்பு முகாம்களை விரிவுபடுத்துவோம். 

மாணவர்கள் கற்பவர்கள் மட்டுமல்ல, கற்றுக் கொடுப்பவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.

No comments:

அதிகம் படித்தவை